இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா..! சர்வே இதோ

0
1268

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் மத்தியில் சண்டையும் குழப்பமும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் முழுதும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இருந்து இந்த வாரம் ஏவிக்ஷனில் யார் பலியாக போக போகிறாரகள் என்று ரசிகர்கள் ஓரளவிற்கு யூகித்து வைத்து விட்டனர்.

bigg-boss

இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் வீட்டில் இருந்து கண்டிப்பாக ஒருவர் வெளியேற போவது உறுதி. அந்த வரிசையில் இந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இருந்து பார்க்கும் போது மும்தாஜ், பொன்னம்பலம், அ னந்த் வைத்தியநாதன் மற்றும், மமதி ஆகியோர் ஏவிக்ஷனில் வர அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றது.

இதில் நடிகை மும்தாக் மற்றும் பொன்னம்பலத்தை எடுத்துக் கொண்டால் இவர்கள் இருவருக்கும் மற்ற இருவர்களை காட்டிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். அதனால் ரசிகர்களின் ஒட்டு இவர்களை காப்பாற்ற வாய்ப்புகள் அதிகம். இதில் பொன்னம்பலதிற்கு சமூக வலைத்தளங்களில் கூட ஏகப்பட்ட தனிப்பட்ட ஆதரவுகள் இருந்து வருகின்றது.

Mamathi-and-Mumtaj-in-Bigg-Boss-House

அதே போல அனந்த் வைத்யநாதனை எடுத்துக் கொண்டால், இவர் மீது சக போட்டியாளர்களுக்கு எந்த வித கோபமும் இல்லாவிட்டாலும், இவரது வயதை காரணம் காட்டியும், போட்டியாளர்களுடன் நெருங்கி பழகாகததையும் காரணம் காட்டியும் இவரை கடந்த வாரமே சில போட்டியாளர்கள் ஏவிக்ஷன் செய்திருந்தனர்.இந்த காரணத்தை முன்வைத்தனர்.அதனால் ஆனந்த் வைத்தியநாதன் தான் இந்த வாரம் வெளியேறுவார் என நினைத்திருந்தனர்.

ஆனால், ஆனந்த் வைத்யநாதனை காட்டிலும் மமதி தான் இந்த வாரம் எலிமினேஷனில் சிக்கும் பலியாடாக இருக்க போகிறார். ஏனனில் ஆரம்பத்தில் இவர் மீது பெரிய நெகடிவ் பார்வை விழாத போதும், இந்த வாரம் முழுக்க இவர் செய்த சில செயல்கள் போட்டியாளர்களை எரிச்சலூட்டியது. இவரது தனிப்பட்ட சுகம் கருதி சில டாஸ்குகளில் ஈடுபாடு இல்லாமல் இருந்ததால் சக போட்டியாளர்களின் லக்ஸரி பட்ஜெட்டும் அடி வாங்கியது.

அதே போல இந்த வாரம் நமது behind talkies பக்கத்தில் நடத்திய சர்வேயில் கூட மமதி சில நாட்கள் ஏவிக்ஷன் லிஸ்டில் 3 வது இடத்திலும், அனந்த் டேஞர் சோனிலும் இருந்தார். ஆனால், தற்போதய நிலவரப்படி மமதி 4 வது இடமான எலிமினேஷன் இடத்தில் தள்ளப்பட்டுள்ளார். எனவே இந்த வாரம் மமதி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றது.

உங்கள் விருப்பமான போட்டியாளர்களுக்கு நீங்கள் vote செய்ய நினைத்தால் இதை கிளிக் செய்யுங்கள் “Bigg Boss Vote Tamil