பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தான்..! யார் தெரியுமா.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

0
1130
Big-Boss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 61 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இந்த வார எலிமினேஷன் யார் என்று மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்த வார நாமினேஷனில் ஜனனி, சென்ராயன், டேனி, வைஷ்ணவி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் இந்த வாரம் வைஷ்ணவி தான் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

vaishnavi

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் பங்கேற்ற வைஷ்ணவி மற்ற போட்டியாளர்களை பற்றி புறம் பேசுகிறார் என்று ஆரம்பம் முதலே இவர் மீது ஒரு குறை இருந்து கொண்டே வந்தது. மேலும், இவர் சில வாரங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் வீட்டில் இருந்து வெளியேறி சில நாட்கள் ரகசிய அறையில் இருந்து வந்தார். பின்னர் அந்த அறையில் இருந்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பினார் வைஷ்ணவி.

இந்த வாய்ப்பு வேறு எந்த போட்டியாளர்களுக்கும் கிடைக்காத போதும் வைஷ்ணவிக்கு கிடைத்தது. இருப்பினும் இவர் புறம் பேசும் பழக்கத்தை விட்ட பாடில்லை. அதனால், போட்டியார்களின் வெறுப்பை மட்டுமல்ல ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். அதுமட்டுமல்லாமல் இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் மற்ற போட்டியாளர்களை விட வைஷ்ணவிக்கு ஆதரவு கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.

-விளம்பரம்-

Vaishnavi

எனவே, இந்த வாரம் வைஷ்ணவி தான் வெளியேற்றபட போகிறார் என்று மக்கள் மனதில் ஏற்கனவே ஒரு கணிப்பு இருந்து ககொண்டே இருந்தது. அந்த கணிப்பு இந்த வாரம் ஊர்ஜிதமாகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டுள்ளார் வைஷ்ணவி. அதே போல இந்த வாரம் எலிமினேஷன் வேறு ஒரு புதிய முறையில் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement