இளம் நடிகைகளுக்கு இணையாக பாத்திமா பாபு செய்த யோகா – வைரலாகும் வீடியோ.

0
13059
fathima
- Advertisement -

தென்னிந்திய சினிமா துறையில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் பாத்திமா பாபு. இவர் நடிகை என்பதை விட பிரபலமான செய்தி வாசிப்பாளர் என்று சொல்லலாம். இவரை அதிகம் செய்தி வாசிப்பாளராக தான் மக்களுக்கு தெரியும். இவர் 1964 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவர் தூதர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தான் தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் தமிழில் ஜெயா டிவியில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CBAoq7FgIQD/?igshid=6dfabllqkjgv

பின் தமிழில் 1996 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘கல்கி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார். அதன் பின்னர் ஏசியா நெட் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

- Advertisement -

தற்போது இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக பங்கேற்றார். இந்நிலையில் நடிகை பாத்திமா பாபு அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B86dkUQHkkY/

அதை பார்த்து பலரும் வியந்து போய் விட்டார்கள். இந்த வீடியோவில் அவர் யோகா செய்துள்ளார். இளம் நடிகைகளுக்கு இணையாக யோகா செய்து அசத்திய உள்ளார். இதை ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement