அர்ச்சனா sefe சனம், சோம், சுரேஷ் – இந்த மூன்று பேரில் ஒருவர் தான் இந்த வாரம் அவுட்.

0
893
kamal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 5 வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா மற்றும் வேல்முருகன் வெளியேறிய நிலையில் அவர்களின் வெளியேற்றத்தை நிரப்ப அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார்கள். தற்போது இருக்கும் நிலையில் 16 போட்டியாளர்களும் அப்படியே இருக்கின்றனர் ஆனால் 5 வாரம் நிறைவேறிவிட்டது.இந்த நான்கு வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை வெடித்து விடுகிறது. அந்த வகையில் இந்த வாரம் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு இடையிலான பிரச்சனை தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

அதே போல கடந்த வாரம் ஆரி, இனிமேல் யார் யார் என்னென்ன செய்கிறீர்கள் என்பதை நெத்தி பொட்டில் அடித்தது போல சொல்வேன் என்றார்.அதற்கு ஏற்றார் போல இந்த வாரம் முழுக்க பல இடங்களில் பல உண்மைகளை தைரியமாக கூறியிருந்தார். நேற்றய நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட மூன்று போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் ஆரி, நிஷா, சோம் சேகர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் டாஸ்க் மூலம் ஆரி அடுத்த வார கேப்டனாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வாரம் பல மாற்றங்களை கூட கொண்டுவந்துள்ளார் ஆரி. அதே போல கடந்த சில தினங்களுக்கு முன்னர் சனம் – பாலாஜி விவகாரத்தில் பாலாஜி சொன்ன அட்ஜஸ்ட்மென்ட் / காம்ப்ரமைஸ் என்ற வார்த்தையால் அவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது.

- Advertisement -

மேலும், இந்த விவகாரத்தில் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், அப்படி எதவும் நடைபெறவில்லை. நேற்றைய நிகழ்ச்சியில் கமல் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு கமல் நடிக்கும் 232 வது படமான விக்ரம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதே போல போட்டியாளர்களும் கமல் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பாடல் டெடிகேட் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இருப்பினும் நேற்றைய நிகழ்ச்சியில் கமல், சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி சமித்தா பிரச்சனையை தீர்த்து வைத்தார்.

சொல்லப்போனால் நேற்றைய நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் சமூக இருவருமே வறுத்தெடுத்து விட்டார். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோ வில் சுசித்ரா நீதிபதியாக செயல்பட்ட லட்சணத்தை பஞ்சாயத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார் கமல். இது ஒருபுறமிருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, அனிதா, பாலாஜி, அர்ச்சனா, சனம் ஷெட்டி, சோம் சேகர், சுரேஷ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement