2.0 டாஸ்க்கில் செஞ்ச தியாகம் எல்லாம் வீண் – கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா ?

0
599
Adk
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மெட்டிஒலி நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,,Adk என்று 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

இதில் அமுதவாணன், Adk ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர் பாராத விதமாக ரச்சிதா வெளியேறி இருந்தது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த சீசனின் கடைசி நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. எந்த வாரமும் இல்லாமல் இந்த வாரம் தான் நாமினேஷன் மிகவும் தாமதமாக நடைபெற்றது.

- Advertisement -

கடைசி நாமிநேஷன் :

அமுதவாணன் ஏற்கனவே டிக்கெட்டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று இருப்பதால் அவர் நேரடியாக இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுவிட்டார். எனவே, மீதமிருந்த அசிம், விக்ரமன், சிவின், கதிரவன் ஏடிகே. மைனா நந்தினி ஆகிய ஆறு பேருக்குள் மத்தியில் இந்த வாரம் நாமினேஷன் நடைபெற்றது.இதில் பலரும் எதிர்பாரத விதமாக அசீம் விக்ரமனை நாமினேட் செய்யவில்லை. ஆனால், விக்ரமன் அசிமை நாமினேட் செய்திருந்தார்.

பரபரப்பாக நடந்த Voting :

இந்த வார நாமினேஷன் முடிவில் நேரடி இறுதிப்போட்டைக்கு தகுதி பெற்றிருக்கும் அமுதவாணனைத் தவிர அசிம், விக்ரமன், சிவின், கதிரவன் ஏடிகே. மைனா நந்தினி ஆறு போட்டியாளர்களுமே நாமினேட் ஆகியிருக்கிறார்கள்.எனவே இறுதி வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்திருக்கிறது. இதில் கண்டிப்பாக விக்ரமன் மற்றும் சிவின் வெளியேற அதிக வாய்ப்பு இல்லை.

-விளம்பரம்-

வெளியேறியது யார் :

எனவே மீதமுள்ள நான்கு பேரில் யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் மைனா,கதிர், Adk ஆகிய மூவரில் யாவரது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த சீஸனின் கடைசி வாரத்தில் ADK வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ADK ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால், அடிக்கடி புறம்பேசி தன் பெயரை டேமேஜ் செய்துகொண்டார்.

வெளியேறிய ADK :

இதனால் நெட்டிசன்கள் பலர் இவருக்கும் ஊர் கிழவி ADK என்ற பட்டமும் கொடுத்து இருந்தனர். இறுதி வாரம் என்பதால் பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய பல போட்டியாளர்கள் உள்ளே சென்ற வண்ணம் இருகின்றனர்.பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பலரும் சக போட்டியாளர்களுடன் ஜாலியாக சில டாக்குகளை விளையாடி வருகின்றனர். மேலும், உள்ளே சென்றவர்கள் கொடுக்கும் டாஸ்கை தட்டாமல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதில் ADK மொட்டை எல்லாம் அடித்துக்கொண்டார். ஆனால், அவரது தியாகம் வீணாகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

Advertisement