இந்த சீஸனின் முதல் டபுள் Evictionல் நாமினேட் ஆன போட்டியாளர்கள் – இந்த லிஸ்ட்ல இவர் கண்டிப்பா Out, இன்னொருத்தர் யாரா இருக்கும் சொல்லுங்க?

0
403
BiggBoss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்காக நாமினேஷன் லிஸ்ட் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 56 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, விஜே ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார்.

-விளம்பரம்-

வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

கடந்த வாரம் நாமினேசன் பட்டியலில் கதிரவன், ஜனனி, ரக்ஷிதா, மைனா, தனலட்சுமி, குயின்சி பெயர் இடம் பெற்றுஇருந்தனர். இதில் கதிரவன் அதிக வாக்குகள் பெற்று தப்பித்து விட்டார். இவரை அடுத்து ஜனனி, ரக்ஷிதா வாக்குகள் பெற்று இருந்தனர். இறுதியில் குயின்சி வெளியேற்றப்பட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் நடைபெற்று இருந்தது.

நேற்றைய நிகழ்ச்சியிலேயே நடிகர் கமல் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த வாரம் சிறந்த போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மணிகண்டன், சிவின், தனலட்சுமி ஆகியோருக்கு இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடத்தப்பட்டு இருந்தது. இதில் மணிகண்டன் வெற்றி பெற்று இந்த வார தலைவராகி விட்டார் இதனால் அவர் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார்.

-விளம்பரம்-

அதேபோல கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் வெற்றி பெற்று தனலட்சுமி நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் சென்று விட்டார் அதனால் அவரும் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார் இப்படி ஒரு நிலையில் இன்று நடைபெற்ற நாமினேஷனில் பெரும்பாலானோர் ஆயிஷாவின் பெயரை தான் கூறியிருந்தார்கள். அவரை தொடர்ந்து ஜனனி, ராம், அசீம், கதிர், adk ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் கண்டிப்பாக இந்த லிஸ்டில் இருந்து ராம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே ராம் பெரிதாக மக்களை கவரவில்லை. எனவே, அவர் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மீதமுள்ள ஜனனி, ராம், அசீம், கதிர், adk ஆகியோர்களில் யார் வெளியேறுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

Advertisement