பிக் பாஸ் இளம் நடிகைக்கு கொரோனா. ஐயயோ, இவர் கூட பிக் பாஸ் ஜோடில ஆடுனவங்க நிலைமை ?

By Rajkumar · 6/5/2021

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். சமீபத்தில் கூட கே வி ஆனந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் காலமானார். இப்படி சினிமா உலகை ஆட்டிப்படைத்தது வரும் கொரோனா தொற்று சின்னத்திரை பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.

இதையும் பாருங்க : மூன்று குழந்தைகள், லண்டலின் செட்டில் ஆன ஈரம், யூத் பட நடிகை - எப்படி இருக்காங்க பாருங்க.

பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான கேப்ரில்லா தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இளம் நடிகையான கேப்ரில்லா '7சி' தொடர் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷின் 3 படத்திலும் ஸ்ருதி ஹாசன் தங்கையாக நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'முரட்டு சிங்கிள்' நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். அதே போல் சமீபத்தில் விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். இதில் இவருக்கு ஜோடியாக ஆஜித் நடனமாடி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்படுட்டுள்ளது. இதனால் இவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full