மூன்று குழந்தைகள், லண்டலின் செட்டில் ஆன ஈரம், யூத் பட நடிகை – எப்படி இருக்காங்க பாருங்க.

0
7885
sindhu

சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களை விட ஒரு சில நடிகைகள் தான் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் போய்விடுகிறது. அந்த வகையில் நடிகை சிந்து மேனன் ஒருவர். தமிழில் 2001ஆம் ஆண்டு வெளியான சமுத்திரம் படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் சிந்து மேனன். அதன் பின்னர் தமிழில் இவர் யூத் படத்தில் நடித்திருந்தார். பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் 2009ஆம் ஆண்டு வெளியான ஈரம் படத்தில் நடித்திருந்தார் இந்த படத்திற்கு இவருக்கு சிறந்த நடிகைக்கான விஜய் அவார்ட்ஸ் கூட வழங்கப்பட்டு இருந்தது.

நடிகை சிந்து மேனன் 1985ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரு மலையாள படத்தில் பிறந்தார். இவர் தனது 10 வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். மலையாள குடும்பத்தில் பிறந்தாலும் இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாக பேச தெரியும்.1994ஆம் ஆண்டு ராஷ்மி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக மாறினார். அதன்பின்னர் தனது 15 வயதில் கன்னடா மியூசிக் சேனலில் வீ.ஜே வாக வேலை செய்தார்.

இதையும் பாருங்க : தேசிய விருது பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு

- Advertisement -

பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.கடந்த 2010ஆம் ஆண்டு டொமினிக் பிரபு என்ற லண்டனை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஸ்வெல்தான என்ற மகள் பிறந்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் கூட தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

இறுதியாக 2012 ஆம் ஆண்டு வரை தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவரை எந்த மொழி திரைப்படத்திலும் காண முடியவில்லை.திருமணத்திற்கு பின்னர் லண்டனில் வசித்து வரும் இவர் குடும்பத்தை பார்த்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவரது லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement