இன்ஸ்டாவில் இந்த 6 பேரை மட்டும் பின் தொடரும் கேபி – இந்த அன்பு கேங் நபர மட்டும் பண்ணல.

0
13556
gab
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நாளையோடு நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-
gab

இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு தினத்திற்கு முன்னர் கேப்ரில்லா 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்த சீசனில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நபர்களில் கேப்ரில்லா மற்றும் கேப்ரில்லா சோம் சேகர் இருவருக்கும் மூன்றாம் இடம் கிடைப்பது கூட சந்தேகமே. எனவே, கேப்ரில்லாவின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கேப்ரில்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 102 நாள் பிக் பாஸ் பயணத்திற்கு பின்னர் வீட்டிற்கு திரும்பியுள்ளேன் என்று பதிவிட்டிருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் கேப்ரில்லா இருந்த வரை அன்பு கேங்கில் தான் இருந்தார். கேப்ரில்லா வெளியேறிய போது மற்றவர்களை விட அன்பு கேங்கில் இருந்தவர்கள் தான் மிகவும் வருத்தப்பட்டனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களில் அர்ச்சனா, ரியோ,சோம், ஜித்தன் ரமேஷ் , ஆஜீத், பாலாஜி ஆகிய 6 பேரை மட்டும் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து உள்ளார் கேப்ரில்லா. ஆனால், இதே அன்பு கேங்கில் இருந்த நிஷாவை கேப்ரில்லா ஏன் பின்தொடரவில்லை என்பது தான் தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement