வெளியில் வந்தும் குமாரை கைவிடாத கேபி – Night Party பார்ட்டி வீடியோ இதோ.

0
5305
gab
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

அதே போல இறுதி போட்டிக்கு ஒரு சில நாள் மட்டுமே இருந்த நிலையில் கேப்ரில்லா 5 லட்சத்தை எடுத்துகொன்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.. ஆனால், கேப்ரில்லா பேட்டியை எடுத்தவுடன் ரியோ வந்து நான் எடுப்பதாக இருந்தேன் நீ ஏன் எடுத்த என்று கூறினார். அதே போல நீ ஏன் போக வேண்டும் என்று கேபி கேட்டதற்கு, எனக்கு என் பொண்ண பாக்கணும், என்னிடம் ஹாப்பி பொங்கல் சொல்லிவிட்டு அந்த பெட்டியை என்னிடம் கொடுத்துவிடு என்ற. அதற்கு கேபியோ, நீ போகணும்னா நீ எடுத்திருப்ப இல்ல என்று கேபி கேட்க, நான் ரெடியா தான் இருந்தேன் என்று ரியோ கூறினார்.

- Advertisement -

ஆனால், இறுதி வரை கேபி தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளாமல் தான் இருந்தார். இருப்பினும் இறுதி வரை ரியோ, எனக்கு வீட்டுக்கு போகணும் என்று கூறிக்கொண்டே இருந்தார்.நீ போனா உங்க அம்மாவ மட்டும் தான் பாக்கணும் ஆனால், நான் நிறைய பேர பாக்கணும் என்று ரியோ கூற, அதற்கு கேபி எனக்கு அம்மா மட்டும் தானடா இருக்காங்க என்று உருக்கத்தோடு கண் கலங்கினார்.கேப்ரில்லாவின் இந்த முடிவை பலரும் பாராட்டி இருந்தனர்.

என்னதான் கேப்ரில்லா அன்பு கேங்கில் இருந்தாலும் இவருக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கத்தான் செய்தது. அதே போல டாஸ்க்கில் கூட சிறப்பாகத்தான் விளையாடினார் கேபி. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த கேபிக்கு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கேக் வெட்டி கோலாகளமாக வரவேற்பை கொடுத்துள்னனர். மேலும், எப்போதுமே பாஸிடிவா இருப்போம் குமாரு என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement