பொங்கலுக்கு விஜய் படம் வரவில்லை என்பது தான் வருத்தமாம் இந்த பிக் பாஸ் நடிகைக்கு.!

0
923
- Advertisement -

சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் நேற்று (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்த இந்த இரண்டு படங்கலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

-விளம்பரம்-

கார்த்திக் சுப்புராஜுடன் முதல் முறையாக இணைந்துள்ள ரஜினி ‘பேட்ட’ படத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் தனது முழு ஸ்டைலையும் இறக்கியுள்ளார். அதே போல அஜித், ‘விஸ்வாசம்’ படத்தில் தனது சென்டிமெண்டால் ரசிகர்களை மனமுருக செய்துள்ளார்.


அதே போல அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒன்றரை ஆண்டு கழித்து அதிலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அஜித் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்களுக்கு டபுள் சந்தோசம்.

- Advertisement -

ஒரே நேரத்தில் இரண்டு மாபெரும் நடிகர்களின் படங்களும் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர். ஆனால், பொங்கலுக்கு விஜய் படம் வரவில்லை என்று பிக் பாஸ் காயத்ரி மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement