தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பேரணிக்குத் தடை விதித்திருப்பதை கண்டித்து நடிகையும் பாஜக கலை மற்றும் கலாசசரா பிரிவின் செயலாளர் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக வருகிற 10 தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை பொது இடத்தில் வைப்பதற்கும், நீரில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்கள் தங்கள் வீடுகளில் வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இப்படி ஒரு நிலையில் விநாயகர் சதுர்த்தி பேரணிக்குத் தடை விதித்திருப்பதை கண்டித்துள்ள காயத்ரி ரகுராம், சர்வதேச கிருத்துவ நாடுகளில் கூட விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது அதை திமுகவால் தடுக்க முடியாது கட்டுப்பாடுகள் ஓடு விநாயகர் சதுர்த்தி தமிழ் நாட்டில் கொண்டாடப்படும். எங்களுடைய இந்து பண்டிகை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக்கூடாது எனவும் டாஸ்மாக்கை மூடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : எனக்கு முன்னாடி அவர் தான் நடிப்பதா இருந்தது – பாஷா பட அன்வர் சொன்ன சீக்ரட்

Advertisement

ஏற்கனவே அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை ஸ்டாலின் அமுல் படுத்திய போது அதற்கும் எதிர்ப்பு தெரிவித்த காயத்ரி ரகுராம், சாதியையும் ஒழியுங்கள், முதல்வரே.. திராவிடக் கழகம் இன்னும் ஒழிக்கப்படவில்லை. ஆனால் மற்ற மதத்தை அரசுக்குக் கொண்டுவருகிறது .புத்தர் என்று அழைக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் கிறிஸ்தவத்திற்கு மாறுகிறார்கள். இப்படித்தான் நீங்கள் வெவ்வேறு மதத்திற்கு மாறி சாதியை ஒழிக்கிறீர்களா?மத்திய அரசு EWS அறிவித்த பிறகும் நீங்கள் அதை இங்கே தமிழ்நாட்டில் அறிவிக்க விரும்பவில்லை. அனைத்து 79 FC சாதியினரையும் பழிவாங்கிய பிறகு இந்து வெறுப்பு உங்களை விட்டுச்செல்லுமா?  என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்தது குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, டாஸ்மாக்கைத் திறந்து அதிகமான மக்களை விடுகிறோம். இந்த நிலையில் எதற்காக விநாயகர் சதுர்த்தி பேரணியைத் தடை செய்ய வேண்டும். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்று சொல்வதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. வருகிற காலங்களில் முதல்வரைச் சந்தித்து முறையிடுவதா? அல்லது எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து எப்படி இதனை எடுத்துச் செல்வது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறி இருந்தார்.

Advertisement
Advertisement