எனக்கு முன்னாடி அவர் தான் நடிப்பதா இருந்தது – பாஷா பட அன்வர் சொன்ன சீக்ரட்

0
13320
basha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வேற அளவில் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் 1995ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பாட்ஷா. இந்த படத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், சரண் ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்தது. மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்தின் நண்பனாக அன்வர் பாட்ஷா என்ற கதாபாத்திரத்தில் சரண்ராஜ் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதோடு இந்த படத்தில் ரஜினி பாட்ஷாவாக மாறுவதற்கு ஒரு முக்கிய காரணமே சரண்ராஜ் கதாபாத்திரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் சரண் ராஜும் ஒருவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் சரண்ராஜ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய பாட்ஷா பட அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, உண்மையிலேயே பாட்ஷா படத்தில் அன்வர் கதாபாத்திரத்தில் மம்முட்டி அவர்கள் தான் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், ஏற்கனவே தளபதி படத்தில் ரஜினியும் மம்முட்டியும் நடித்ததால் என்னை அந்த படத்தில் நடிக்க தேர்வு செய்தார்கள்.

அந்த படம் எனக்கு மிக நல்ல பெயரை வாங்கித் தந்தது. அந்த படத்திற்கு பிறகு எனக்கு பல வாய்ப்புகளும் அமைந்தது என்று கூறினார். தளபதி படம் போல் பாட்ஷா படத்தில் ரஜினி, மம்முட்டி சேர்ந்து நடித்திருந்தால் வேற லெவல்ல சூப்பர் ஹிட்டாகி இருக்குமென்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement