இப்படி பின்னால வேல பாக்காம, ‘திமுக’ ஆதரவளர்னு ஓத்துக்கோங்க. EIA வை எதிர்த்த சூர்யா- விமர்சித்த பிக் பாஸ் நடிகை.

0
1675
surya
- Advertisement -

மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்து வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் வரைவிற்கு சூழலியல் செயற்பாட்டாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சினிமா துறையில் குறித்து அறிக்கையை வெளியிட்டது நடிகர் சூர்யாமற்றும் கார்த்தி தான். இவர்கள் இருவருமே EIA-2020 க்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதிலும் நடிகர் சூர்யா அந்த அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதோடு,பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-

இந்த அறிக்கையை வெளியிட்ட சில மணி நேரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். மேலும், பல்வேறு நடிகர் நடிகைகளும் EIA 2020 க்கு எதிராக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இருப்பினும் சூர்யாவின் இந்த கருத்திற்கு ஒரு சில அரசியல் கட்சியினரும். கட்சியின் ஆதரவாளர்களும் மாற்றுக் கருத்தை தெரிவித்து வந்தார்கள்.

- Advertisement -

அந்த வகையில் நடிகை காயத்ரி சூர்யாவின் இந்த கருத்துக்கு முரணாக தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், மக்களை திமுகவின் பொய்களிலிருந்தும் நடிகர்களில் குழப்பங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும். உங்களின் ஆதரவை கட்சிக்கு நேரடியாக தெரிவித்துவிடுங்கள். பின்னாலிருந்து இப்படி வேலை செய்யாதீர்கள். நீங்கள் சொல்வது சரிதான் என்று மக்களை நம்ப வையுங்கள். ஆராய்ந்து அதில் இருக்கும் உண்மையை புரிந்து கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பாஜக கட்சியின் தீவிர தொண்டர் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்தான். இந்த நிலையில் இவர் சூர்யாவை திமுகவின் ஆதரவாளர் என்பது போல குறிப்பிட்டுள்ளது, சூர்யாவின் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும், ஒருத்தன் நல்லது சொல்ல கூடாது. அரசியல் புரிதல் யார் பேசினாலும் அவர்கள் அனைவரும் திமுக, திக ஆதரவாளர்கள் அல்லது அதனுடன் தொடர்பு படுத்துவது நியாயமற்றது என்று காயத்ரி ரகுராமன் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement