அந்த மாதிரி ஆளுங்கள பாத்தா தான் நாய் குறைக்கும் - சூர்யா ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை கேலி செய்த BJP நடிகை.

By subhashini · 19/11/2021

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையில் அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக பல வன்னிய சமூகத்தினர் குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக வந்த ‘குருமூர்த்தி’ என்ற கதாபாத்திரத்தின் வீட்டில் இருக்கும் காலண்டரில் அக்னி குண்டம் படம் காட்டப்பட்டது.

https://twitter.com/BJP_Gayathri_R/status/1461195435670786049

இது பல வன்னியர் சமூகத்தினரை காயப்படுத்தவாக குற்றச்சாட்டுங்கள் எழுந்தது. இதனால் படத்தில் அந்த அக்னி கலசம் நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த படத்தில் உண்மையான செங்கேணி பார்வதிக்கு நியாயம் கிடைக்க போராடிய வன்னியரின் பெருமையை சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதையும் பாருங்க : 'இது எங்க குழந்தை இல்ல' - கடுப்பான பாரதி கண்ணம்மா பரீனாவின் கணவர். ஏன் பாருங்க.

இந்த படத்திற்கு எதிராகவும் சூர்யாவிற்கு எதிராகவும் பல்வேரு வன்னிய அமைப்புகள் தொடர்ந்து எதிர்புகளை தெரிவித்து வருகிறது. மேலும், கடந்த சில நாட்களாக ட்விட்டரில் westandwithsurya என்ற ஹேஷ் டேக்குகளை கூட சூர்யாவின் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கினர். அந்த வகையில் சமீபத்தில் சூர்யாவின் புகைப்படம் போட்டு, அவருக்கு பின்னால் சில நாய்கள் குறைப்பது போல சித்தரிக்கப்பட்டு இருக்கும் போஸ்டர் ஒன்றை சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர்.

https://twitter.com/G8MJjYXS7AA512X/status/1461210577099845635

இந்த நிலையில் இந்த போஸ்டர் குறித்து பதிவிட்டுள்ள நடன இயக்குனரும், நடிகையும், பிஜேக கட்சியையும் சேர்ந்த காயத்ரி ரகுராம் 'நாய்கள் திருடன் பார்த்து குரைக்கும் அல்லது தெரியாதவர்களை எச்சரிக்க குரைக்கும் அல்லது தீய சக்தியை பார்த்து குரைக்கும்.. பைரவர் கடவுள் மக்களுக்கு பாதுகாவலர் மற்றும் மக்களுக்கு துணை.

https://twitter.com/RhinoExtinct/status/1461200394181218307

சூர்யா ரசிகர்கள் இந்த போஸ்டரை தெரியாமல் தவறுதலாக உருவாக்கினார்கள் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு சூர்யாவின் ரசிகர்கள் பலர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த பதிவுகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full