‘இது எங்க குழந்தை இல்ல’ – கடுப்பான பாரதி கண்ணம்மா பரீனாவின் கணவர். ஏன் பாருங்க.

0
915
farina
- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-119.png

இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பரீனாவிற்கு ஆண், குழந்தை பிறந்துள்ளது. அதனை ஒரு குட்டி ஷூ புகைப்படம் மூலம் அழகாக தன் இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்து இருந்தார் பரீனா.

இதையும் பாருங்க : ஜென்டில் மேன், முத்து போன்ற படங்களில் நடித்த நடிகையா இது ? இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

- Advertisement -

பரினாவிற்கு குழந்தை பிறந்த செய்தி வெளியான உடன் பல யூடுயூப் சேனல்கள் வீடியோ வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் ஒரு யூடுயூப் பக்கம் ஒன்றில் பரினாவின் குழந்தை என்று புகைப்படம் ஒன்று வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து பரினாவின் கணவர் ரஹ்மான் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், வணக்கம் நான் உங்கள் ரஹ்மான், இது போன்ற யூடுயூப் பக்கங்களை நம்பாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவிற்கு கீழ் கமன்ட் செய்துள்ள அவர்., நான் ரஹ்மான், இது எங்கள் குழந்தை இல்லை. இது போல போலியான விஷயங்களை பரப்பாதீர்கள். இந்த வீடியோவை நீக்கவில்லை என்றால் நான் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன். மேலும், இந்த பக்கத்தை தொடரும் நபர்கள் இந்த வீடியோவில் இருக்கும் புகைப்படத்தை பகிர வேண்டாம் என்று கமென்ட் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement