“நல்லது, கொழுப்பு குறையும்” – சீனியர் நடிகை என்றும் பாராமல் குஷ்புவை பங்கம் செய்த பிக் பாஸ் நடிகை

0
46617
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80,90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் 80 கால கட்டங்களில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக திகழ்ந்தவர் என்று சொல்லலாம். நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். நடிகை குஷ்பூ அவர்கள் சினிமா திரை உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த்,சரத்க்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது நடிகை குஷ்பூ அவர்கள் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் குஷ்புவும் ஒருவர். இந்நிலையில் நடிகை குஷ்பு பதிவிட்ட ட்விட்க்கு நடிகை காயத்ரி ரகுராம் அவர்கள் கிண்டல் செய்து உள்ளார். தற்போது இது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை காயத்ரி ரகுராமிற்கும், குஷ்பூவும் டிவிட்டரில் அடிக்கடி சண்டைகள் வந்து கொண்டிருக்கும். ஏனென்றால் நடிகை காயத்ரி அவர்கள் பிஜேபி கட்சியின் ஆதரவாளர்கள்.

- Advertisement -

நடிகை குஷ்பூ அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் ட்விட்டரில் ஏதாவது ஒரு வாக்குவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அது என்னவென்றால் இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை நான் சமூக வலைத்தளங்கள் கணக்கில் இருந்து வெளியேறி விடலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தாராம். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதை பார்த்த நடிகை குஷ்பூ அவர்கள் பிரதமரின் இந்த முடிவை கலாய்க்கும் விதமாக நான் அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஐஸ்கிரீம் சாப்பிடுவதை விட்டு விடலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும், இதனை பார்த்த நடிகை காயத்திரி ரகுராம் குஷ்பூ டீவ்ட்க்கு கிண்டலடித்து உள்ளார். டீவ்ட்டில் நடிகை காயத்திரி கூறி இருப்பது, அது நல்லது, கொழுப்பு குறையும் என்று கூறி உள்ளார். மேலும், சீனியர் நடிகை என்று கூட பாராமல் காயத்ரி ரகுராம் கேலி, கிண்டல் செய்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பயங்கரமாக கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement