‘இப்படி பண்ணா ராகவனும் அண்ணாமலையும்’ தன் வீடியோவை போட்டு அசிங்கபடுத்திய நபர். கொதித்து போன காயத்ரி.

0
2998
gayathri
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனின் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். 

-விளம்பரம்-

இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் என் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனது 14 வயதில் இருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார் இவர் 2002 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

- Advertisement -

மேலும், இவர் பல ஆண்டுக்கு முன்னரே BJP கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதே போல தற்போது இவர் அந்த கட்சியின் தமிழ் நாடு கலை இலக்கியம் மற்றும் கலாசாரப் பிரிவின் தலைவியாக இருந்து வருகிறார். இவர் BJP யில் இருந்தாலும் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதே போல சமுக வலைத்தளத்திலும் பலர் இவரை சீண்டி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இவரை சமீபத்தில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய KT ரகவானுடன் இணைத்து ட்விட்டர் வாசி ஒருவர் மோசமான பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதை பார்த்து கடுப்பான காயத்ரி, நீங்கள் இந்த 35007 @maha2021jaya பற்றி புகார் செய்யப் போகிறீர்களா அல்லது நான் புகார் செய்ய வேண்டுமா? நீங்கள் ட்விட்டர் harassment நீங்கள் அதை தீவிரமாக எடுத்துக்கொள்வீர்கள் இல்லையா? என்று ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், அவர் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார் .. என் ஆடை திடீரென நழுவியது. பொங்கல் தினத்தன்று 10 பெண்கள் மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்து அவர்கள் என் முந்தானியை மிதித்தனர். துரதிர்ஷ்டவசமாக திமுக இது போன்ற பெண்கள் வீடியோக்களை லைக்குகளுக்காக பகிர்ந்து கொள்கிறார்கள் என்றும் பதிவிட்டு அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

Advertisement