கண்ணீர் வராமல் அழுவது எப்படி என்று லாஸ்லியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள் பங்காமாக கலாய்த்த முன்னாள் போட்டியாளர்.!

By Rajkumar · 9/9/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது சீசனில் யாஷிகா என்று இளம் பெண் போட்டியாளர்கள் தான் இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் ஆரம்பத்தில் இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா.

https://twitter.com/gayathriraguram/status/1170743850421211136

ஆரம்பத்தில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்களும் ஆர்மியும் இருந்து வந்தன. ஆரம்பத்தில் மிகவும் சாதுவான பெண்ணாக இருந்த இவர் தற்போது அடாவடியாக நடந்து வருகிறார். இதனால் பலரின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் லாஸ்லியா குறித்து ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்துள்ளார் முன்னாள் போட்டியாளரான காயத்ரி ரகுராம்.

இதையும் பாருங்க : கவினுக்கு எதிராக கமன்ட் போடுங்க.! பணம் கொடுத்து சாக்க்ஷி செய்த சதி.! இணையத்தில் வைரலாகும் ஆதாரம்.!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே லாஸ்லியா மற்றும் சேரன் அப்பா மகள் என்ற உறவில் வழங்கி வருகின்றனர் ஆனால் லாஸ்லியா பல சமயங்களில் சேரனை விட்டுக் கொடுத்துள்ளார் அதேபோல சேரனை ஒரு சில முறை நாம் இணையட்டும் செய்துள்ளார் லாஸ்லியா ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது அவரை கட்டியணைத்து கண்ணீர் மல்க அழுத லாஸ்லியா.

https://twitter.com/gayathriraguram/status/1170745594970722305

லாஸ்லியாவின் இந்த அழுகையை கிண்டலடித்துள்ள காயத்ரி ரகுராம், கண்ணீர் வராமல் எப்படி அழவேண்டும் என்பதை நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மற்றுமொரு பதிவில், மிகவும் சிறப்பான திறமை தான். சத்தம் மட்டும் தான் வருகிறது கண்ணீர் வரவில்லை என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full