கவினுக்கு எதிராக கமன்ட் போடுங்க.! பணம் கொடுத்து சாக்க்ஷி செய்த சதி.! இணையத்தில் வைரலாகும் ஆதாரம்.!

0
13429
sakshi kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சாக்க்ஷி கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை இவர் போட்டியாளர்கள் பற்றி புறம் பேசிகொண்டே இருந்ததால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டு வந்தார். இருப்பினும் ஒவ்வொரு வாரமாக எப்படியோ எலிமினேஷனிலிருந்து தப்பித்து கொண்டே வந்தார்.

-விளம்பரம்-
Image

ஆரம்பத்தில் கவினுடன் நெருக்கம் காட்டி வந்த சாக்க்ஷி அதன்பின்னர் அவர் லாஸ்லியாவிடம் நெருக்கம் காண்பித்ததால் கொஞ்சம் கவின் மீது கோபம் கொண்டார். இருப்பினும் இப்படி கவின் சாக்க்ஷி லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் ஒரு சில வாரங்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தது. இறுதியில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து சாக்க்ஷி ஓரம் கட்டி விட்டனர்.

- Advertisement -

இதனால் லாஸ்லியா மீதும் கவின் மீதும் கடும் கோபத்தில் இருந்து வந்தார் சாக்க்ஷி. அதே போல சாக்க்ஷி பிக் பாஸ் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது கவினிடம் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. இறுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது கவினடம் பேசிய சாக்க்ஷி, உன்னிடம் வைத்திருந்த விஷம் கலந்த உறவை நான் முறித்து கொண்டதை எண்ணி சந்தோசபடுகிறேன் என்று கூறிவிட்டு தான் வந்தார்.

இந்த நிலையில் கவினை கலாய்த்து பிரபல இனையதளம் ஒன்று பல்வேறு மீம்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு வந்துள்ளது. அந்த முகநூல் பக்கத்திற்கு மெசேஜ் செய்துள்ள சாக்க்ஷி கவினுக்கு எதிராக கமாண்ட் செய்யுங்க என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சாக்க்ஷி ஆர்மியும் கவினுக்கு எதிராக சதி செய்துள்ளதாகவும் இதற்கு சாக்க்ஷியும் பணம் கொடுத்து கவினுக்கு எதிராக மீம்களை செய்யுமாறு சொன்னதாகவும் கவின் ஆர்மி குற்றம் சாட்டியுள்ளனர். ,மேலும், சில ஆதாரங்களையும் இணையத்தில் வெளியுட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement