இப்போதான் Eviction Free Pass டாஸ்க் முடிஞ்சது. அதுக்குள்ள இப்படி ஒரு டாஸ்க்கா.

0
1882
samyuktha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமான மூன்று வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த மூன்று வாரத்தில் அன்பு, சண்டை, பல பஞ்சாயத்துக்கள் அரங்கேறி இருந்தது. நாளுக்கு நாள் பிக் பாஸின் சுவாரசியம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இது ஒரு புறம் இருக்க நவராத்திரி விழாவின் சிறப்பு கொண்டாட்டமாக நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சி 6.30 மணி முதல் 10.30 வரை 4 மணி நேரம் ஒளிபரப்பாகி இருந்தது. அதே நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதில் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்ச்சனாவை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பதால், அவரை தவிர மற்ற அனைவரும் நாமினேஷன் தேர்வில் இடம்பெற்றனர். இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் இந்த வாரம் ஷிவானி, அர்ச்சனா, ஆரி, கேப்ரில்லா, சம்யுக்தா ஆகிய 5 பெயரை தவிர பாலாஜி, சோம் சேகர், நிஷா, ரம்யா பாண்டியன், ரியோ, வேல் முருகன், சுரேஷ், அனிதா, ஜித்தன் ரமேஷ், ஆஜித்,சனம் ஆகிய 11 பேரும் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதற்கான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இன்று வெளியான முதல் ப்ரோமோவில், அனிதா சம்பத் நேற்றைய நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை எண்ணி பிக்பாஸ் இடம் அழுது புலம்பி இருந்தால் அதே போல இரண்டாவது குருமாவில் பாலாஜி முருகதாஸ் கூறிய வார்த்தையால் அவரிடம் அர்ச்சனா நிஷா ரியோ ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரமோவில் இந்த சீசனுக்கான கோல்டன் டிக்கெட்டுக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது போல தெரிகிறது. இதில் சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா இருவருக்கும் இடையே ஏதோ வாக்குவாதமும் ஏற்பட்டு உள்ளது போல தெரிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த சீசனில் எவிக்ஷன் ப்ரீ பாஸ் என்ற ஒரு சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சலுகையை ஆஜீத் வென்று இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நமினேஷனில் ஆஜித்தும் இடம் பெற்று இருந்தார். அதேபோல கடந்த வாரம் ஆஜீத் தான் குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக இருந்தார். ஆனால் எவிக்ஷன் பிரீ பாஸை வைத்து அவர் எலிமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார். எவிக்ஷன் பிரீ பாஸ் கொடுக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில் அதற்குள்ளாகவே கோல்டன் டிக்கெட்டுக்கான டாஸ்க்கை கொடுத்திருக்கிறார் பிக் பாஸ் என்பதை பொறுத்திருந்து பார்போம்.

-விளம்பரம்-
Advertisement