சொந்தங்களால் உடலில் 136 தையல்கள், 35 வயதில் முதல் Smartphone – காயங்கள் நிறைத்த Gpமுத்துவின் அறிந்திராத கதை.

0
986
gpmuthu
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கி இரண்டாம் வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல்கோலார், ராபர்ட், ஷெரினா, அசீம், ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி , விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர்.

-விளம்பரம்-

பொதுவாகவே நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கழித்து தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கம். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கும். ஆனால், இந்த நிகழ்ச்சி துவங்கும் முன்பே ஆர்மி துவங்கப்பட்டது என்றால் அது ஜி பி முத்துவிற்கு தான். இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டவர் ஜி பி முத்து தான்.

- Advertisement -

யூடுயூப் வைரல் நபர் :

”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டதும் டிக் டாக் வாசிகள் பலரும் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று இடம் பெயர்ந்து விட்டனர். அந்த வகையில் ஜி பி மமுத்துவும் இன்ஸ்டாகிராமில் மற்றும் யூடுயூபில் வீடியோக்களை பதிவிட்டுபிரபலமானார்.

தபால் சேவையை மீடுடெடுத்த மீட்பாளர் :

அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ அனைத்தும் பெரும் வைரலானதுஇவரது யூடுயூப் சேனலை 3லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ‘ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சியான புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது இருப்பினும் வேகமாக வளரும் யூடுயூப் சேனல். தபால் சேவையை மீடுடெடுத்த மீட்பாளர் ஜி பி முத்து தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

-விளம்பரம்-

தற்கொலை முயற்சி :

யூடுயூபில் இவர் வளர்ந்து வந்துகொண்டு இருக்கும் போதே குறிப்பிட்ட சமூகத்தை கிண்டல் செய்து, வீடியோ வெளியிட்டதாக போலீஸ் விசாரணை வரை சென்று பின்னர், எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் வீடு திரும்பினார். மேலும், இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதில் இருந்தும் மீண்டு வந்தார்.

அண்ணன் தம்பி சண்டையில் 136 தையல் :

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி பி முத்து 3ஆவது வரைக்கும் படித்தவர் GP முத்து.10வயதில் வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்து அதனது 28ஆவது வயதில் தனியாக தொழில் செய்ய (Carpenter) ஆரம்பித்தார்.அண்ணன் தம்பி சண்டையில் 136 தையல் போடும் நிலைக்கு சென்றார். அதன் தழும்புகள் தான் இன்னும் அவரது உடலில் இருக்கிறது. ஒரு விபத்தில் தம்பியை இழந்தார்.தம்பி குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார்.அதே நேரம் தொழில் சருக்கல் என பல பிரச்சினைகளை சந்தித்தார். தனது 35வயதில் தான் முதல் Smart Phone வாங்கினார்.

இந்த பிரச்சினைகளில் இருந்து மனதை திசை திருப்ப டிக்டாக் செய்ய ஆரம்பித்தார்.அதில் அடிமையாயகவும் மாறினார்.ஒரு கட்டத்தில் டிக்டாக் தான் பிழைப்பு என்றும் இருந்தார். ஒரு புறம் சமூக வலைதளத்தில் வீடியோக்கள் பதிவிட்டு வந்தாலும் இன்னமும் உடன்குடியில் தன்னுடைய Carpenter தொழிலை செய்து வருகிறார். இத்தனை கஷ்டங்களை தாண்டி வந்து தற்போது பிக் பாஸ் வரை வந்து இருக்கும் Gp முத்து பலருக்கும் இன்ஸ்பிரஷன் தான்.

Advertisement