பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய GPமுத்து. இனி யாருக்காக பிக் பாஸ் பாக்கறது. சோகத்தில் ரசிகர்கள்.

0
374
gpmuthu
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 13 நாட்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ஜிபி ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. மேலும், இரண்டாம் வாரத்திற்கான டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, பொதுவாகவே நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கழித்து தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கம்.

- Advertisement -

ஆனால், இந்த முறை நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கப்பட்டது. அதில் ஜி பி முத்துவும் ஒன்று. இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டவர் ஜி பி முத்து தான். இப்படி ஒரு நிலையில் ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தாமாக வெளியேறி இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

கடந்த சில தினங்களாக ஜிபி முத்து தன் குடுமபத்தினர் நினைப்பாக இருக்கிறது அதனால் நான் வீட்டிற்கு போக வேண்டும் என்று கூறி வந்தார். தன்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. என்னுடைய வீட்டில் உள்ளவர்கள் ஞாபகம் எனக்கு வருகிறது என்று லேசாக ஆரம்பித்தார். அது அப்படித்தான் இருக்கும் சாதாரணமாக ஏற்படும் ஒன்று, என அவரை சமாதானப்படுத்தினர். ஆனால் நாளாக நாளாக அவர் தன்னால் தூங்க முடியவில்லை சரியாக சாப்பிட முடியவில்லை, கட்டாயம் வீட்டுக்கு போக வேண்டும் என்று தெரிவித்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இன்று அவர் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறாராம். மேலும், சமீபத்தில் கண்பேஷன் ரூமில் பிக் பாஸிடன் ஜி பி முத்து பேசிய வீடியோவையும் வனிதா வெளியேறிய போது பிக் பாஸ் பேசிய ஆடியோவையும் ஒன்றினைத்து எடிட் செய்யப்பட்ட ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ போலி தான் என்றாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜி பி முத்து வெளியேறி இருப்பது உறுதியாகி இருக்கிறது.இதனால் ஜி பி முத்துவின் ரசிகர்கள் பெரும் சோகத்தில்ஆழ்ந்துள்ளனர்.

இந்த சீசனை ஜி பி முத்துவிற்காக பார்க்கும் ரசிகர்கள் பலர் இருந்தனர். தற்போது அவர் வெளியேறி இருப்பதால் இனி பிக் பாஸே பார்க்க கூடாது என்ற முடிவில் இறங்கிவிட்டனர் ஜி பி முத்து ஆர்மி. அதே சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால் குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டும் என்று தெரிந்து தான் வந்தீர்கள் பின்னர் ஏன் தற்போது இந்த முடிவை எடுத்தீர்கள் என்று சிலர் ஜி பி முத்து வை விமர்சித்து வருகின்றார்கள்.

Advertisement