துணிவா ? வாரிசா ? எத முதல்ல பாப்பீங்க – ஜி.பி. முத்து கொடுத்த பதிலை பாருங்க.

0
408
Gpmuthu
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே வாரிசு மற்றும் துணிவு திரைப்பட சர்ச்சைகள்தான் சோசியல் மீடியாவில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் போய்க்கொண்டிருக்கிறது. இதனால பல சர்ச்சைகளும் கருத்து வேறுபாடுகளும் ரசிகர்களா மத்தியில் இருந்து வருகிறது. தாங்கள் முதலில் பார்க்கப்போகும் படம் எது என்று பலரும் கூறிவரும் நிலையில் சோசியல் மீடியா பிரபலமான ஜி.பி.முத்து தான் முதலில் பார்க்கும் படம் குறித்து கூறியுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

சோசியல் மீடியா பிரபலம் :

ஜி பி முத்துவிற்கு நடிகர் சசிகுமார் வைத்திருக்கும் கோரிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென நிகழ்ச்சியின் இடத்தை பிடித்தவர் ஜிபி முத்து. டிக்டாக் நண்பர்களே என்ற வார்த்தையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ஜி பி முத்து. இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். இவர் 3ஆவது வரை தான் படித்து இருக்கிறார். இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

- Advertisement -

இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். அதிலும் யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் வீடியோ சொல்லலாம். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் வேகமாக வளரும் யூடுயூப் சேனல்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து:

மேலும், யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சீசன் கிடைத்து இருந்தது. அதோடு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலக்கி கொண்டு இருந்தார். இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டது ஜி பி முத்து தான். அதோடு இவர் இறுதி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குடும்பத்தை விட்டு பிராய மனதில்லாமல் வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டார்.

-விளம்பரம்-
gpmuthu

வாரிசா? துணிவா?

தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில்தான் இவர் தன்னுடைய ஒட்டு வீடை விட்டு மாடி வீட்டுக்கு குடி பெயர்ந்தார். இந்த நிலையில்தான் ஜி.பி.முத்துவிடம் நீங்க விஜய் நடித்த வாரிசு அல்லது அஜித் நடித்த துணிவு இரண்டில் எது பார்ப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜி.பி.முத்து விஷுவசம் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது எனவே முதலில் அஜித் நடித்திருந்த துணிவு பார்த்து விட்டு பின்னர் விஜய் நடித்த வாரிசு பார்ப்பேன் என்று கூறினார்.

இதற்க்கு முன்னர் அஜித் விஜய் நடித்திருக்கும் துணிவு படத்தை முதலில் பார்ப்பேன் என்று அஜித்தின் “துணிவு” பட இயக்குனர் ஹச். வினோத் கூறியது வைரலாகிய நிலையில் சோசியல் மீடியா பிரபலமான ஜி பி முத்து அஜித்தின் துணிவைதான் முதலில் பார்ப்பேன் எனக் கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement