முன்பை விட உடல் எடை கூடி படு குண்டாக மாறியுள்ள ஆர்த்தி - ப்பா எப்படி ஆகிட்டாங்க பாவம்.

By Rajkumar · 20/12/2020

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருந்தது. தற்போது நான்காவது சீசன் கூட இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடைய இருக்கிறது. என்னதான் மூன்று நான்கு சீசன்களை கடந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீசனாக இருந்து வருகிறது. முதல் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்களும் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான ஆர்த்தியும் ஒருவர். நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷ்கரை நாம் அனைவரும் அறிவோம்.

பல படங்களில் வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் நடித்துள்ளார். இடையில் பட வாய்ப்புகள் குறைந்தாலும், கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்தார் ஆர்த்தி. ஆர்த்தி என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இவரது குண்டான தோற்றம் தான். ஆரம்பத்தில் ஆர்த்தி சற்று அளவான உடலில் தான் இருந்தார். ஆனால், உடல் எடை கூறைக்கின்றேன் என்று இவர் எடுத்த சில முயற்சிகளால் இவரது உடல் எடை மேலும் அதிகரித்துவிட்டது.

இதையும் பாருங்க : கடும் உடற் பயிற்சி படு ஸ்லிம்மான நடிகை அனுபமா பரமேஸ்வரன் - என்ன இப்படி ஆகிட்டாங்க.

நடிகை ஆர்த்தி பொதுவாக தனது உருவத்தை யாராவது கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது அதே போல மற்றவர்கள் கலாய்ப்பதற்கு முன்பாக தனது உருவ அமைப்பை தானே கலாய்த்து புகைப்படத்தை பதிவிட்டு விடுவார் ஆர்த்தி. ஆர்த்திக்கு பிரபல காமெடி நடிகர் கணேஷகருடன் திருமணம் நடைபெற்றது. மேலும், திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் இவர்களுக்கு குழந்தையும் இல்லாமல் இருக்கிறது.

தற்போது சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை ஆர்த்தி தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் முன்பை விட இப்போ மேலும் குண்டாகி விட்டீர்களே என்று புலம்பி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full