தமிழ் சினிமா மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகளை அறிமுகம் செய்திருக்கிறது. நயன்தாரா துவங்கி, சாய் பல்லவி வரை பல்வேறு மலையாள நடிகைகள் தமிழ் சினியாவிலு ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தமிழ் தெலுங்கு ஹெய்ந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் மலர் டீச்சருக்கு பின்னர் நம் அனைவரயும் கவர்ந்தது நடிகை அனுபமா தான். பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதில் நடித்த 3 கதாநாயகிகளுக்குமே சினிமாவில் ஒரு நல்ல அந்தஸ்து கிடைத்து விட்டது.
மேலும் அந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த அனுபமாவும் அதன் பின்னர் தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது தெலுங்கில் இவர் ஏகப்பட்ட பிஸியாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அனுபமா பரமேஸ்வரன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி படு வைரலாக பரவி வந்தது. பும்ராவுடன் அனுபமா இணைத்து பேசப்பட்டதிற்கு காரணமே இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் பூம்ராவின் ஸ்டேட்டஸ் அனைத்திற்கும் டுவிட்டரில் லைக் செய்து வருகின்றார்.
இதையும் பாருங்க : மீண்டும் சுதப்பும் சிம்பு – ஓடாத படத்தை தூசி தட்டி இரண்டாம் பாகம் எடுக்கப் போறாராம். என்னத்த சொல்ல.
அதேபோல் பூம்ராவும், அனுபமா புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார் என்று முடிச்சு போட துவங்கி விட்டனர்.இருவரும் டேட்டிங் கூட சென்றதாக கிசுகிசுக்கபட்டது. இந்த நிலையில் பும்ரா குறித்து பேசிய அனுபமா, பும்ரா ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே எனக்கு தெரியும். இதுவரை நான் அவரை சந்தித்ததே இல்லை. நான் அவரை காதலிப்பதாக பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது. எந்த ஒரு அடித்தளமும் இல்லாமல் ஒரு பெண்ணை பற்றி சமூக வலைதளத்தில் இப்படி ஒரு செய்தி பரவியது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றுகூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடி படத்திற்கு பின்னர் அனுபமா தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இருப்பினும் அதர்வாவுடன் தள்ளிப் போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. அனுபமா என்று சொன்னதும் அவரது சுருட்டை முடியும் பப்லியான முகமும் தான் நினைவிற்கு வரும் ஆனால், சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வந்த அனுபமா உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்.