விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து தலைமறைவான பிக் பாஸ் நடிகையின் கணவர் (இவர் Bjp கட்சிய சேர்த்தவர் தான ? )

0
439
suja
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து வருபவர் ஆர்த்தி. இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆர்த்தி என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இவரது குண்டான தோற்றம் தான். ஆரம்பத்தில் ஆர்த்தி சற்று அளவான உடலில் தான் இருந்தார். ஆனால், உடல் எடை கூறைக்கின்றேன் என்று இவர் எடுத்த சில முயற்சிகளால் இவரது உடல் எடை மேலும் அதிகரித்துவிட்டது.நடிகை ஆர்த்தி பொதுவாக தனது உருவத்தை யாராவது கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது அதே போல மற்றவர்கள் கலாய்ப்பதற்கு முன்பாக தனது போல அமைப்பை தானே கலாய்த்து விடுவார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் நகைச்சுவையாளர், மேடை கலைஞர் போன்ற பன்முகங்கள் கொண்டவர். இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த வண்ணக்கனவுகள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்.அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகை ஆர்த்தி அவர்கள் ஏற்கனவே தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகரான கணேஷ்கரை காதலித்து வந்தார். பின் ஆர்த்தி, கணேஷ்ஷை 2009 ஆம் ஆண்டு திருமணம் திருமணம் கொண்டார்.

- Advertisement -

ஆர்த்தியின் திரைப்பயணம்:

இவர்களுக்கு திருமணமாகி பல வருடங்களுக்கு மேலாகி விட்டது. இருந்தும் தற்போது வரை இவர்கள் இளம் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகும் இவர் பல படங்களில் வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் நடித்துள்ளார். இடையில் பட வாய்ப்புகள் குறைந்தாலும், கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்தார் ஆர்த்தி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.

கணேஷின் திரைப்பயணம்:

இருப்பினும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். அதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் நடிகை ஆர்த்தியின் கணேஷ்கர் சாலை தடுப்பில் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவர் பாலச்சந்திரனின் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் அரண்மனை, கதிர்வேலன் காதல், கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

கார் விபத்தில் கணேஷ்:

பின் இவர் நடிகை ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கணேஷ் தன்னுடைய காரில் பட்டினப்பாக்கம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. அது மட்டுமில்லாமல் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டியும் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி கீழே விழுந்துள்ளார். உடனே சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் எல்லோரும் ஒன்று கூடியபோது கணேஷ்கர் அப்படியே காரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து உள்ளார்.

கணேஷின் போலீஸ் வலைவச்சு:

மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் மருத்துவமனைக்கு சென்று கணேஷை தேடி இருக்கின்றனர். ஆனால், அவர் அங்கு காணவில்லை. அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போதும் அவருடைய போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பின் அவருடைய வீட்டிற்கு சென்று தேடியபோது வீட்டிலும் அவர் இல்லை என்று அவருடைய மனைவியும் நடிகையுமான ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தனியார் மருத்துவமனைகளில் அவரை தீவிரமாக தேடியும் கிடைக்கவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும், கணேஷ் வேகத்தில் காரை ஓட்டினாரா? அல்லது மது போதையில் காரை ஓட்டினாரா? என்பதெல்லாம் அவரை பிடித்த பிறகு தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Advertisement