பைக் விபத்து.! தலைக்காத்த ஹெல்மெட்.! ஹரிஷ் கல்யாண் போட்ட பதிவால் ரசிகர்கள் ஷாக்.!

0
1140
Harish-kalyan
- Advertisement -

கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த சிந்து சமவெளி என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஹரீஷ் கல்யாண். தற்போது வரை 9 படங்கள்நடித்துள்ளார் ஹரீஷ். ஆனாலும் இவருக்கு மக்களிடையே பிரபலத்தை கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். 

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்து பைனல் வரை நின்று சமாளித்தவர் ஹரீஷ். பல பெண்களின் கனவு கண்ணனாக வலம் வருகிறார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டார்காம் பக்கத்தில் விபத்தின் போது சேதமடைந்த தலைக்கவச புகைப்படம் ஒன்றை ஸ்டேட்டஸ்ஸாக வைத்திருந்தார். மேலும், அதில் பைக் ஓட்டுபவர்கள் அனைவரும் ஹெல்மட் அணியுங்கள் யாரும் அதனை உதாசின படுத்தாதீர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் ஹரிஷ் கல்யாணுக்கு தான் விபத்து ஏற்பட்டு விட்டதோ என்று நினைக்கையில், அந்த விபத்து அவரது நண்பருக்கு ஏற்பட்டது என்றும் அவர் தற்போது நலமாக இருக்கிறார் என்றும் அடுத்த புகைப்படத்தில் குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement