படத்தை பார்க்க செம கெட்டப்பில் சென்ற ஹரிஷ் கல்யாண்.! கொண்டாடிய ரசிகர்கள்.! லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்.!

0
1084
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே இவர் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு பெயரையும் புகழையும் கொடுத்தது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சிக்கு பின்னரே இவருக்கு ஏகப்பட்ட அவர் மிகவும் உருவாக்கினர். இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் இன்று ‘எஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ என்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ”புரியாத புதிர் ”என்ற படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.

இதையும் படியுங்க : இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் விமர்சனம் இதோ.! 

- Advertisement -

பியார் பிரேமா காதல் போன்று இக்கால இளைஞர்களை கவரும் வகையில் இந்த படம் ஒரு நவீன காதல் ஸ்டோரியாக அமைந்துள்ளது. எனவே, இந்த படமும் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை காண்பதற்காக ஹரிஷ் கல்யாண் தியேட்டர் தியேட்டராக சென்றுள்ளார்.

அதுவும் இந்த படத்தில் அவர் பயன்படுத்தும் பைக்கை எடுத்துக்கொண்டு சாதாரண வேஷ்டி சட்டையில் அணிந்தவாறு திரையரங்குக்கு சென்றுள்ளார் ஹரிஷ் கல்யாண். இவரது எளிமையை பார்த்து பலரும் இவரை பாராட்டிய ரசிகர்கள் , திரையரங்கில் இவருக்கு ஆராவாரா வரவேற்ப்பையும் அளித்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

-விளம்பரம்-
Advertisement