இந்திய அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி அதிக பட்ஜெட் செலவில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மொழியிலேயே முதன் முதலில் இந்தி மொழியில் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. தற்போது ஹிந்தியில் 15வது சீசன் ஒளிபரப்பாக உள்ளார்கள். மேலும், தமிழ்நாட்டில் தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், அவர் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு நாளுக்கு 4 கோடி ரூபாய் என்று மொத்தமாக 15 நாட்களுக்கு 60 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். இந்த நிலையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு எவ்வளவு சம்பளம் என்று தற்போது சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் பாருங்க : இதெல்லாம் தல பாத்தா என்ன நெனப்பாரு – பாரதி Transformation வீடியோவை கண்டு பங்கம் செய்யும் ரசிகர்கள்.

Advertisement

இந்தியில் மொத்தம் 14 வாரங்கள் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதற்கு வாரம் வாரம் 25 கோடி என்ற பெயரில் மொத்தம் 350 கோடி ரூபாய் அவருக்கு ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இவர் மொத்தம் 10 சீசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். முதல் முறை தொகுப்பாளராக அறிமுகம் ஆன ஒரு வாரத்துக்கு இரண்டரை கோடி ரூபாய் சல்மான்கானுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பத்து மடங்காக இவருடைய சம்பளம் அதிகரித்துள்ளது. தற்போது இவருடைய சம்பளம் குறித்து பல கருத்துக்கள் சோசியல் மீடியாவில் எழுந்து வண்ணம் உள்ளன. இந்தியில் பிக் பாஸ் சீசன் 15வது நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement