தற்போது இருக்கும் கால கட்டங்களில் வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகும் படங்களை ரசிப்பதை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிக்கும் மக்கள் தான் அதிகமாக உள்ளனர். அந்த வகையில் தற்போது போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு சேனல்களிலும் தொடர்களை அதிகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் சேனல் நிறுவனம். இதனைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுமே தூள் கிளப்புகிறது.
சின்னத்தம்பி ராஜா ராணி ஈரமான ரோஜாவே நாம் இருவர் நமக்கு இருவர் காற்றின்மொழி மாப்பிள்ளை சிவா மனசுல சக்தி என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகும் சீரியல்கள் சென்டிமென்டாக ஹிட் அடித்து விடுகிறது. அந்த வகையில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலும் ஒன்று.
விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி ஒளிபரப்பாக துவங்கிய “பாரதி கண்ணம்மா” சீரியல் மாபெரும் ஹிட் அடைந்துள்ளது. ஆரம்பத்தில் கொஞ்சம் சுமாராக சென்று கொண்டு இருந்த இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது. அதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர் தான்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர். இதை தொடர்ந்து இந்த சீரியலின் Trp எகிறியது. ஆனால், சமீப காலமாக இந்த தொடர் ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்து வருகிறது.
இதனால் ரசிகர்கள் பலரும் பாரதிக்கு dna டெஸ்ட் எடுத்து தொலைங்க என்ற அளவிற்கு கடுப்பாகிவிட்டனர். பாரதிக்கு DNA டெஸ்ட் எடுத்துவிட்டால் இந்த தொடர் முடிந்துவிடும் என்பதால் இந்த தொடரை ஜவ்வாக இழுத்து கொண்டு வருகின்றனர். அதே போல இந்த தொடரில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பும் ரொம்பவும் ஓவராக தான் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் பிரசாத்தின் நவரச நடிப்பை கண்டு கேலி செய்யாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் பாரதி ‘வேதாளம்’ படத்தில் வரும் அஜித்தின் Transformation ரேஞ்சுக்கு நடித்து இருப்பதை கண்டு நெட்டிசன்கள் பலரும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.