இவங்க கூட எல்லாம் எனக்கு கசப்பான அனுபவம் தான் கெடச்சது – இசைவாணி அளித்த பேட்டி.

0
549
isaivani
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. யார் டைட்டில் வின்னர்? ஆகப் போகிறார் என்று கணக்கிட முடியாத அளவிற்கு போட்டியாளர்கள் விளையாடி கொண்டு வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் வீட்டில் வாரம் வாரம் எலிமினேஷன் நடந்து கொண்டு இருக்கிறது. நிகழ்ச்சி எவ்வளவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறதோ அந்த அளவிற்கு எலிமினேட்டும் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவத்தை பேட்டி கொடுத்து இருந்தார்கள்.

-விளம்பரம்-
'பிக் பாஸ்' இசைவாணி

அந்த வகையில் இசைவானி பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுபவத்தை சமீபத்தில் பிரபல பத்திரிகையாளரிடம் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ஒரு வித்தியாசமான அனுபவம் இருக்கும் என்று தான் பிக் பாஸுக்கு போனேன். ஆனால், பிக்பாஸ் அனுபவம் ரொம்ப ஹாப்பி என்று சொல்ல முடியாது. இது ஒரு கேம் ஷோ.வார வாரம் எவிக்ஷன் நடந்து யாரையாவது நாமினேட் செய்ய வேண்டும். அதோடு நான் யாரை நாமினேட் செய்தாலும் அவர்களிடம் போய் நான் சொல்லி விடுவேன்.

- Advertisement -

இல்லை என்றால் அது எனக்கு உறுத்தலாக இருக்கும். இதுதான் என்னுடைய இயல்பு. பிக் பாஸ் வீட்டுக்குள் நான் அனைவருடனும் நல்லா பேசி பழக வேண்டும் என்று தான் விரும்பினேன். ஆனால், அங்கு இருந்தவர்கள் என் கூட பழக தயக்கம் காட்டினார்கள். அது ஏன் என்று எனக்கு இப்ப வரைக்கும் தெரியவில்லை. உண்மையை சொல்லப்போனால் ராஜூ, இமான் அண்ணாச்சி போட்ட மொக்க கமெண்ட்டை கூட கைதட்டி சிரிப்பார்கள். ஆனால், நான் ஒரு நல்ல பஞ்ச் பேசினால் கூட அதை கண்டுக்கவே மாட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கு ரொம்ப வலிக்கும்.

அந்த வலி உங்களுக்கு எல்லாம் புரியாது. மேலும், வீட்டில் தாமரை, அண்ணாச்சி இவர்கள் கூட எனக்கு ரொம்ப கசப்பான அனுபவம் கிடைத்தது. அண்ணாச்சி நம்ம ஒன்னு சொன்னால் அதை காது கொடுத்து கூட கேட்க மாட்டார். கேட்காமலேயே அதுபற்றி அவரே ஒரு முடிவுக்கு வந்துவிடுவார். தாமரை அக்கா பண்ணது எல்லாம் நீங்களே டிவியில் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு புரியும். இனி நான் சொல்ல வேண்டியது ஒன்றுமில்லை. பிக்பாஸ் முடிந்து வந்தாச்சு. இனி அடுத்த வேலையை பார்ப்போம் என்று எதார்த்தமாக இசைவாணி கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement