பணம் அனுப்பவில்லை என்றால்…என் அம்மா இதை செய்வேன் என்று என்னை மிரட்டுவார்.. !!

0
718
ishu
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள நடிகை ஐஸ்வர்யா தான் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருகிறார். இவர் மீது மக்களுக்கு வெறுப்பு வர முக்கிய காரணமே பாலாஜி மீது ஒரு டாஸ்கின் போது குப்பை கொட்டியதால் தான். ஆனால், பாலாஜி தன் அம்மா பற்றி தவறாக பேசியதால் தான் நான் குப்பை கொட்டினேன், என் அம்மா தான் எனக்கு முக்கியம் என்று கூறினார் ஐஸ்வர்யா.

-விளம்பரம்-

ishuu

- Advertisement -

ஐஸ்வ்ர்யா, தனது அம்மா தான் முக்கியம் என்றும், அவரை மிகவும் மிஸ் செய்கிறேன் என்றும் பல முறை கூறியிருந்தார். பல ஆண்டுகளாக சென்னையில் தனியாக வசித்து வரும் ஐஸ்வர்யா தனது அம்மாவை நேரில் கண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், தனது அம்மாவை மிகவும் மிஸ் செய்கிறேன் என்றும் பல முறை கூறியிருந்தார். ஆனால், நேற்று ஐஸ்வர்யா தனது அம்மாவை பற்றிய பேசிய சில விஷயங்கள் பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துளளது.

நேற்று ஒளிபரப்பின பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியிடம் பேசிக்கொண்டிருந்த ஐஸ்வர்யா போது, எனது குடும்பத்திற்கும் எனக்கும் இருப்பது பண ரீதியான தொடர்பு மட்டும் தான் இருக்கிறது. எனக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்தபோதும் நான் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசுவேன். ஆனால், அப்போது கூட என்னுடைய அம்மா என்னை பார்க்க வந்ததே இல்லை.

-விளம்பரம்-

Aishwarya

மாதம் 10 தேதி ஆனவுடன் நான் பணம் அனுப்பி விடுவேன் ஆனால் ஒருமுறை கூட அந்த பணம் எப்படி வந்தது, எப்படி சம்பாதிக்கிற பணத்த என்று ஒரு முறை கூட என் அம்மா கேட்டது இல்லை. நான் மாதம் 30 முதல் 40 ஆயிரம் பணம் அனுப்பிவிடுவேன். ஒருவேளை நான் 10 ஆம் தேதி அனுப்பவில்லை என்றால் என் அம்மா பைத்தியம் மாதிரி ஆகிவிடுவாங்க என்று தெரிவித்திருந்தார்.

ஐஸ்வர்யா, தனது அம்மாவை பற்றி பாலாஜியிடம் கூறியதை வைத்து பார்க்கும் போது ஐஸ்வர்யாவின், அம்மா பணத்திற்காக மட்டும் தான் ஐஸ்வர்யாவை எதிர்பார்க்கிறார் என்பது போல ஒரு எண்ணம் தோன்றியது. ஆனால், நேற்று அவருடைய அம்மா பிக் பாஸ் வீட்டில் நுழைந்த போது அனைவரிடமும் தனது மகள் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டிருந்தார்.ஐஸ்வர்யாவும், தனது அம்மாவை கண்டதும் மிகவும் மகழ்ச்சியடைந்தார். இதனால் உண்மையில் ஐஸ்வர்யா, தனது அம்மாவை பற்றி பாலாஜியிடம் கூறியது உண்மையா என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement