நன்றாக இருந்த தலை முடியை மீண்டும் கலர் அடித்து கண்றாவி ஆக்கிக்கொண்டு ஐக்கி பெர்ரி புதிய கெட்டப் இதோ

0
425
iykki
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 58 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. வழக்கம்போல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு சலசலப்பும், சச்சரவும் தொடங்கி விட்டது. அதிலும் நாளுக்கு நாள் போட்டிகள் சவால்கள் அதிகமாகுதல் போட்டியாளர்கள் ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக் கொண்டு விளையாடி வருகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க, வாரம் வாரம் பிக் பாஸ் வீட்டில் எழிமினேஷன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-
May be an image of 2 people, people standing and indoor

இப்படி ஒரு நிலையில் கமலஹாசனுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானதால் எலிமினேஷன் இருக்காது என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி இருந்த நிலையில் ஐக்கி பெர்ரி வெளியேற்றப் பட்டார். இவர் தஞ்சாவூர் தமிழச்சி என்று சொல்லுகிறார். ஆனால், இவரை பார்த்தால் பாரின் ரிட்டர்ன் பொண்ணு போல் இருக்கிறார்.

- Advertisement -

அவரது முடியின் கலருக்கான காரணம் குறித்து பேசிய அவரின் காதலர், ஐக்கி பெர்ரி தலை முடியை கலர் பண்ண கிடையாது. இருக்கிற கலரை ரிமூவ் பண்ணி இருக்காங்க. கருப்பு கலர் நீக்கி அது மேல கோல்டன் கலர் பண்ணி இருக்காங்க. ஐக்கி பெர்ரி தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.

May be an image of 2 people, people standing and indoor

ஐக்கி பெர்ரிக்கு பிடிப்பதைவிட அந்த நாட்டு மக்களுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என்று நினைத்து தான் அவர் தன் தலை முடி கலரை மாற்றினார் என்று கூறி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் ஐக்கி பெர்ரி தன்னுடைய முடியை கருப்பாக்கி கொண்டார் போது அந்த அழுகை பார்த்து பலரும் ஐக்கி பெர்ரி தற்போது தான் அழகாக இருக்கிறார் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஐக்கி பெர்ரி மீண்டும் தன்னுடைய முடியை பழையபடியே மாற்றியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement