‘இது என் கனவு’ – வீட்டிலேயே பார் செட்டப் வைத்த வீடியோவை வெளியிட்ட பிக் பாஸ் நடிகை.

0
485
janani
- Advertisement -

வீட்டில் பார் செட்டப்புடன் நடிகை ஜனனி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் ஜனனி ஐயர். இவர் கர்நாடகாவில் கத்திவாக்கம்-பெங்களூரில் பிறந்தவர். இவர் முதன் முதலாக மாடலிங் தான் செய்தார். அதன் பின் இவர் பல விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் இவர் தமிழில் 2009ஆம் ஆண்டு நந்தினி ஜேஎஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்ற திரைப்படத்திலும், 2010ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு விஷால், ஆர்யா நடிப்பில் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் ஜனனி கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பின்னர் இவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். மேலும், 2018 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக ஜனனி கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஜனனி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் ஜனனி நான்காம் இடத்தைப் பிடித்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த கூர்மன் என்ற படத்தில் இவர் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் பிரையன் பி.ஜார்ஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஜனனி, பாலசரவணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது.

பகீரா படம்:

இப்படி இவர் வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் பெரிய நடிகையாக திரையில் தக்க வைக்க போராடி வருகிறார். தற்போது இவர் பகீரா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். பகிரா படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக ஜனனி நடித்திருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக தான் ஜனனி நடித்திருக்கிறார். இந்த படம் சைக்கோ கதை அம்சத்தை கொண்டதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ஜனனி நடிக்கும் படங்கள்:

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து ஜனனி அவர்கள் யாக்கை திரி மற்றும் முன்னறிவான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, ஜனனி எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஜனனி வெளியிட்ட வீடியோ:

அந்த வகையில் தற்போது பார் செட்டப்பில் ஜனனி வெளியிட்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, ஜனனி அவர்கள் தற்போது தன்னுடைய வீட்டிலேயே பார் செட்டப் ஒன்றை அமைத்திருக்கிறார். அந்த வீடியோவை தான் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுஎன்னுடைய பல நாள் கனவு நிறைவேறிவிட்டது என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வீட்டிலேயே இவ்வளவு பெரிய பாரா! என்றும், மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் என்றெல்லாம் ஜனனியை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Advertisement