பிக் பாஸ் சீசன் 6 மூலம் பிரபலம் அடைந்த ஜனனி குணசீலன் தற்போது ஹீரோயின் ஆக கமிட் ஆகியிருக்கும் செய்திதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி பிறந்த ஜனனி ஸ்ரீலங்காவை சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்ட ஜனனி கடந்த 2021 ஆம் ஆண்டு, தான் செய்த டிக்டாக் ரீலிஸ் மூலம் பிரபலமடைந்தார். அதற்குப்பின் இவர், ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் நிறைய ஷோககளை தொகுத்து வழங்கியிருந்தார்.

அதோடு இவர் தனது சொந்த ஊரான ஜாப்னாவில் ஃபுட் ரிவ்யூ நிகழ்ச்சிகளைக் கூட செய்திருந்தார். இவர் ஒரு செய்தி வாசிப்பாளரும் ஆவார். மேலும், அவர் தனது இணை தொகுப்பாளினி லக்ஷனாவுடன் இணைந்து பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளை செய்யத் தொடங்கினார், அதில் மிகவும் பிரபலமானது Dak Dik Dos. தற்போது எக்கச்சக்க ஃபாலோயர்ஸ்ளை வைத்திருக்கும் ஜனனி எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர்.
பிக் பாஸ் 6 :
இதன் மூலமாக இவருக்கு 'பிக் பாஸ் 6 'நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. ஜனனி பங்கேற்று இருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். இலங்கையில் இருந்து வந்த ஜனனி, லாஸ்லியா போல் இருப்பார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. அதனால் அவருக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அவருடைய பக்கத்தில் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையும் அதிகரித்தது.

ஜனனி வெளியேறிய முக்கிய காரணம்:
ஆனால், அவர் அந்த சீசனில் விஷப் பாட்டிலாக தான் இருந்தார். ஆரம்பத்தில் இவருக்கு இளசுகள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், போகப்போக இவர் கேமில் சரியாக கவனம் செலுத்தவில்லை. அது மட்டும் இல்லாமல் இவர் அமுதவாணனுடன் சேர்ந்து குரூப்பிசம் செய்து விளையாடுவது தான் இவர் வெளியேற்றியதற்கு காரணமானது. அதனால், அந்த நிகழ்ச்சியில் இருந்து 70 வது நாள் ஜனனி வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லியோ படம் :
அதற்குப்பின், ஜனனிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த 'லியோ' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். மேலும், ஜனனிக்கு லியோ படத்தில் சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் அவருக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்திருந்தது. அதற்குப்பின் விஜய் டிவியில் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் கெஸ்ட் ஆக பங்கேற்று இருந்தார். லியோ படத்திற்குப் பிறகு வெகு நாட்களாக ஜனனி எந்த படத்திலும் கமிட்டாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
View this post on Instagram
ஹீரோயின் ஆக அறிமுகம் :
இந்நிலையில், தற்போது ஜனனி கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறாராம். அதாவது தற்போது ஜனனி 'உசுரே' என்னும் படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகி இருக்கிறாராம். டிஜே அருணாச்சலம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் நவீன் டி கோபால் இயக்க இருக்கிறார். தற்போது இந்த செய்தியை ஜனனி தனது instagram பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள்.






