’26 வயசுல கல்யாணம், 30 வயசுல சோ ஸ்வீட் அம்மா’ – இளசுகள் நெஞ்சில் இடியை இறக்கிய ஜனனி. இதோ வீடியோ.

0
523
janany
- Advertisement -

தன்னுடைய எதிர்காலம் குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி கூறி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அனைவரும் ஆவலுடன் காத்திருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கி நான்கு நாட்கள் ஆகி விட்டது. இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறார்கள். வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் களம் இறங்கி இருக்கின்றனர். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதல் நாளிலேயே பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் நான்கு பேர் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கழித்து தான் போட்டியாளர்களுக்குள் சச்சரவு, சண்டை உருவாகும். ஆனால், இந்த முறை முதல் இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு மத்தியில் கலவரம் தொடங்கிவிட்டது.

ஜனனி குறித்த தகவல்:

அதேபோல் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே போட்டியாளர்களுக்கு ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் ஜனனிக்கு இந்த முறை ஆர்மியை ரசிகர்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள். இவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண். இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர். குறிப்பாக, இவர் த்ரிஷாவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு சிறு வயதில் பள்ளியில் எல்லோரும் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் தான் த்ரிஷா ஆக வேண்டும் என்று வகுப்பிலேயே தைரியமாக கூறியவர் ஜனனி.

-விளம்பரம்-

ஜனினி பேசிய வீடியோ:

நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனினுக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்து இருக்கிறது. நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது. மேலும், இவர் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த வாரம் வெஷல் கிளீனிங் லீடராக ஜனனி இருக்கிறார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் ஜனனி தன்னுடைய எதிர்காலம் குறித்து பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில், ஜனனி எனக்கு இப்போது 21 வயது ஆகிறது.

வைரலாகும் வீடியோ:

26 வயதில் ஒரு கல்யாணத்தை பண்ணிக் கொள்வேன். 27 வயதில் குழந்தை பெற்றுக் கொள்வேன். எனக்கு 30 வயதாக இருக்கும் போது என் குழந்தைகளுடன் படிக்கும் அவரது நண்பர்கள் இதுவா உன் அம்மா! சோ ஸ்வீட் என்று சொல்லும்படி இருப்பேன் என்று கூறியிருந்தார். இதை கேட்ட ராபர்ட் மாஸ்டர், அமுதவாணனும் சிரித்துக்கொண்டிருந்தனர். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் அதிகமாக ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement