Kurupeesam பற்றி வாய் கிழிய பேசிய ஜனனி – அமுதவனனுடன் சேர்ந்து நாமினேஷன் பற்றி Code Wordல் பேசியதை பாருங்க.

0
617
janany
- Advertisement -

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி நாமினேஷனின் போது செய்த செயலுக்கு பிக் பாஸ் ரசிகர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் தற்போது 57 நாட்கள் கடந்து விறுவிறுப்பாக சென்று வருகிறது. ஏற்கனவே ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, மகேஸ்வரி, செரீனா, ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி, குய்ன்சி போன்றவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்த பிக் பாஸ் பல டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறது.

-விளம்பரம்-

போட்டியாளர்களும் தங்களுடைய கருத்தை வெளிவாக கூறி வருகின்றனர். இந்நிலையில் தொடக்கம் முதலே பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தவர் இலங்கையை சேர்ந்த ஜனனி. இவர் நாமினேஷனில் வந்தாலும் மற்றவர்களிடம் இவர் நடந்து கொள்வது மற்றும் இவர் பேசும் இலங்கை தமிழும் பிக் பாஸ் பார்வையாளர்கள் ஓடுகளை வாரி வழங்கி வந்தனர். மேலும் இவர் சக போட்டியாளர்களுடன் பழகிய விதத்திற்காகவே அவர் ஒருபோதும் அவமதிக்கப்படவில்லை. இருப்பினும், மைக் இல்லாமல் அமுதவாணனுடன் உரையாடிய பிறகு முதல் முறையாக அவர் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளனர்.

- Advertisement -

அதற்கு பின்னர் முற்றிலும் வேறு மாதிரியான ஜனனியை நம்மால் பார்க்க முடிந்தது. மற்ற போட்டியாளர்களை பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசுவது, உருவத்தை வைத்து கலாய்ப்பது என பல செயல்களை செய்து வந்த ஜனனி தொடர் நாமினேஷன் லிட்டில் வரத் தொடங்கினார். இதனை தெடர்ந்து மூத்த தொலைக்காட்சி நடிகையான ரசிதாவைப் பற்றிய உருவாக்கேலி பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்குள்ளானது.

​​​​இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செயல்முறைக்கு முன்பு அவர் தனது இணை போட்டியாளர்களுடன் குறியீட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசிய விடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யாரை நாமினேட் செய்வது என்று தனக்குத் தெரியவில்லை என்று ஜனனி அமுதவாணம் மற்றும் தனலட்சிமியுடம் கூறினார், அதற்கு உடனே அமுதவாணன் `ஆயிஷா எங்கே? என்று கேட்கிறார். இதிலிருந்து அவர்கள் அனைவரும் ஆயிஷாவை நாமினேட் செய்ய விருக்கின்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

-விளம்பரம்-

மேலும் அமுதவாணன் அப்படி சொன்னதும் ஜனனியும் தனலட்சுமியும் சிரித்தனர். அவரைத் தொடர்ந்து தனலட்சுமி ADK சாப்பிட்டாரா என்று கேட்டிருந்தார், அதற்கு ஜனனி கதிரவன் பக்கத்துல இருக்காரு என்று ஊற்றினார். இதனையடுத்தது இந்த வார பிக் பாஸ் நாமினேஷன் தேர்வு நடந்தது அதில் அமுதவாணம், ஜனனி, ஆயிஷா போன்றோர் ஆயுஷாவையும், கதிரவணையும் தேர்வு செய்தனர். இந்நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் கதிரவன், ஆயிஷா, அசீம் போன்றவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இப்படி கலந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகவே இவர்களின் மீது கடுமையான கண்டனங்களை ரசிகர்கள் வைத்து வருகின்றனர். அதில் ஒருவர் `குரூபிசம் உச்சத்தில் இருக்கும் ஜனனி அமுதவாணன் மற்றும் தனா வெட்கமற்ற உயிரினங்கள். விஜய் டிவி ஜனனி மற்றும் அமுதவாணன் ஆகியோருக்கு மிகவும் சாதகமாக உள்ளது. பிக்பாஸ் கூட அவர்களுக்கு ஆதரவாக உள்ளது என்று கூறியிருந்தார். மற்றொருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியானது அமுதவாணம் மற்றும் ஜனனி செய்யும் தவறுகளை மறைத்து சாதகமாக செயல்படுகிறது என்று கூறியிருந்தார். மேலும் ஜனனி பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகவே பலரும் ஜனனி, அமுதவாணன், தனலட்சிமி போன்றவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement