அழகா இருந்து Cute தமிழ் பேசுனா மட்டும் போதுமா ? Gp முத்து விவாகரத்தில் ஜனனி சொன்ன கருத்தை விமர்சிக்கும் நெட்சன்கள்.

0
480
janany
- Advertisement -

தனலட்சுமி விவாகரத்தில் gp முத்துவுக்கு ஆதரவாக பேசிய ஜனனியை ஒரு சிலர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 6 நாட்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதல் நாளிலேயே பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் நான்கு பேர் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

இப்படி ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பித்ததால் போட்டியாளர்கள் மத்தியில் முதல் நாளே சர்ச்சை தொடங்கியது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே ஜி பி முத்துவுக்கும் தனலட்சுமிக்கும் விவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின் இருவரும் வாக்குவாதத்தில் இறங்கிஇருந்தார்கள். பின் ஜி பி முத்துவிற்கு ஆதரவாக ஜனனியும் பேசியிருந்தார். அப்போது, தனலட்சுமி செய்த விஷயம் எனக்கு பிடிக்கவில்லை. இது வீடு மாதிரி.

தனலட்சுமியை தாக்கிய ஜனனி:

அவரவர் வயதுக்கு ஏற்ற மாதிரி தான் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். ஒரே வயது உடையவர்களை எடுப்பதற்கு இது ஒன்னும் ரீலீஸ் கிடையாது என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது தனலட்சுமிக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தது. பின் இரவு நள்ளிரவில் விக்ரமனிடம் தனலட்சுமி, ரீல்ஸ் செய்ததால் தான் நான் இங்கு இருக்கிறேன். ஜனனி என் ரீல்ஸ் என்று பேசினார்? என தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

விக்ரமன்- ஜனனி வாக்குவாதம்:

இதனை எடுத்து விக்ரமன் ஜனனியிடம் நீங்கள் ரீல்ஸ் என்று சொன்ன வார்த்தை தவறு என்று சொன்னவுடனே ஜனனி அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜனனியின் இந்த செயலை தொடர்ந்து அவருக்கு Gp முத்து ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும். வயதில் பெரியவர் என்பது எல்லாம் ஒரு தகுதியா ? ஜி பி முத்துவை வைத்து ஜனனி, சேரன் லாஸ்லியா போல அப்பா மகள் சென்டிமென்டை உருவாக்க பார்க்கிறார் என்று விமர்சித்து வருகின்றனர்.

ஜனனியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

மேலும், இதே ஜனனி தனலட்சுமி குறித்து முன்னர் ஆயிஷாயிடம் ‘தனலட்சுமி ரீல்ஸ் பண்றது எனக்கு தெரியாது என்று கூறி இருந்தார். அதுவே Adk விடம் பேசிய போது ‘அவ ரீல்ஸ் பண்றது தெரியாது, டிக் டாக்ல தான் பாத்து இருக்கேன்’ என்றும் கூறி இருந்தார். இப்படி ஜனனி மாற்றி மாற்றி பேசுவதை சுட்டிகாட்டி வரும் பலர் அழகாக இருக்கிறார் என்று அவர் சொல்வது அனைத்தும் உண்மையாகிவிடாது என்று கூறி வருகின்றனர்.

Advertisement