விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான எண்ணற்ற பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் நடிகர் ஜித்தன் ரமேஷும் ஒருவர். இயக்குனர் ஆர்.கே.வின்சென்ட் செல்வா இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான "ஜித்தன் " படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரமேஷ். அந்த படத்திற்கு பின்னர் இவரை ஜித்தன் ரமேஷ் என்றே அழைத்து வந்தனர்.நடிகர் ஜீவா அவர்களின் சகோதரரான இவர் ஜீவாவிற்கு பின்னர் தமிழ் சினிமாவில் நுழைந்தாலும், நடிகர் ஜீவா அளவிற்கு இவரால் பெயரெடுக்க முடியவில்லை.
https://twitter.com/VijayMusicOffl/status/1319617221149118464
தமிழில் இதுவரை 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால், அந்த 10 படங்களும் தோல்வியில் தான் முடிந்தது.2011 ஆம் ஆண்டு வெளியான "ஓஸ்தி " படத்திற்கு பின்னர் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் 2012 ஆம் ஆண்டு வெளியான "ஒரு நடிகனின் வாக்கு மூலம் " படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் விஜய் நடித்த "ஜில்லா" படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் ஒரு சில நொடிகளுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.
நீண்ட வருட இடைவேளைக்கு பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "ஜித்தன் 2" படமும் எதிர்பார்த்த அளவில் அளவிற்கு வெற்றியடையவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல குறைவாக பேசினாலும் அடுத்தவர்கள் செய்யும் தப்பின தக்க நேரத்தில் சுட்டிக்காட்டி வருகிறார் ஜித்தன் ரமேஷ். இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் நடிகர் ஜித்தன் ரமேஷ் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இதையொட்டி போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்கள். அதேபோல நடிகரும் ஜித்தன் ரமேஷின் சகோதரருமான நடிகர் ஜீவா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் டிவி வழியாக தோன்றி தனது சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். மேலும் ஜித்தன் ரமேஷின் மனைவி மற்றும் பிள்ளைகள் வாழ்த்து தெரிவித்த தாகவும் கூறப்படுகிறது.




