பிக் பாஸில் இருந்து வெளியேறிய கையோடு தனது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஜித்தன் ரமேஷ்.

0
1541
jithan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 11வது வாரத்தை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர், அதில் ஜித்தன் ரமேஷும் ஒருவர். இயக்குனர் ஆர்.கே.வின்சென்ட் செல்வா இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “ஜித்தன் ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரமேஷ். அந்த படத்திற்கு பின்னர் இவரை ஜித்தன் ரமேஷ் என்றே அழைத்து வந்தனர்.

-விளம்பரம்-

நடிகர் ஜீவா அவர்களின் சகோதரரான இவர் ஜீவாவிற்கு பின்னர் தமிழ் சினிமாவில் நுழைந்தாலும், நடிகர் ஜீவா அளவிற்கு இவரால் பெயரெடுக்க முடியவில்லை. தமிழில் இதுவரை 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால், அந்த 10 படங்களும் தோல்வியில் தான் முடிந்தது.2011 ஆம் ஆண்டு வெளியான “ஓஸ்தி ” படத்திற்கு பின்னர் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஒரு நடிகனின் வாக்கு மூலம் ” படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் விஜய் நடித்த “ஜில்லா” படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் ஒரு சில நொடிகளுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.

- Advertisement -

நீண்ட வருட இடைவேளைக்கு பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “ஜித்தன் 2” படமும் எதிர்பார்த்த அளவில் அளவிற்கு வெற்றியடையவில்லை. இறுதியாக உங்கள போடணும் சார் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் தோல்வி தான் அடைந்தது. இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ‘மிரட்சி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த பிப்ரவரி மாதமே நடைபெற்று விட்டது. ஆனால், கொரோனா பிரச்சனை காரணமான இந்த படத்தின் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-
Advertisement