பிபி ஜோடி பைனல் – முதல் பரிசை வென்றது இவர்கள் தான். இந்த ரெண்டு ஜோடிக்கு இரண்டாம் பரிசு. இதோ புகைப்படம்.

0
4136
BBJodigal
- Advertisement -

தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த 4 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை துவங்கி இருந்தது.

-விளம்பரம்-

ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக பங்கேற்ற இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் ஷிவானி -சோம்சேகர், கேப்ரில்லா – ஆஜித், வனிதா -சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத் – ஷாரிக், அறந்தாங்கி நிஷா – தாடி பாலாஜி, சம்யுக்தா – ஜித்தன் ரமேஷ், பாத்திமாபாபு – மோகன் வைத்தியா, ஜூலி – சென்றாயன் ஆகிய பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அதில் ஷிவானி மற்றும் வனிதா தாங்களாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள்.

இதையும் பாருங்க : தன்னை பெற்று வளர்த்த தாய் தந்தை மீதே வழக்கு தொடர்ந்துள்ள விஜய் – ஷாக்கான விஜய்யின் ரசிகர்கள்.

- Advertisement -

மேலும், பாத்திமா பாபு – மோகன் வைத்தியா மற்றும் ஜூலி – சென்றாயன் ஜோடி எலிமினேட் ஆகிய நிலையில் மீதமுள்ள ஜோடிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி இன்று (செப்டம்பர் 19 ) ஒளிபரப்பானது. இதில் அனிதா – ஷாரிக் ஜோடி முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

இவர்களுக்கு முதல் பரிசாக மூன்று லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், இந்த சீசனில் இரண்டு பேருக்கு இரண்டாம் பரிசை அறிவத்து இருக்கின்றனர். அது ஆஜீத் – கேப்ரில்லா மற்றும் ஜித்தன் ரமேஷ் – சம்யுக்தா. இந்த இரண்டு ஜோடிக்கும் இரண்டாம் பரிசாக இரண்டு லட்ச ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement