இந்த ரெண்டு பேருக்கும் தகுதியே இல்ல – தாமரை செயலால் கடுப்பான போட்டியாளர்கள்.

0
584
thamarai
- Advertisement -

அமீர்-பாவனி பைனல்ஸ்க்கு போக தகுதி இல்லை என்று தாமரை கூறி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் அதிக பேராதரவை பெற்று இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்திருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் ஜோடி என்ற நடன நிகழ்ச்சி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது. முதல் சீசனில் அனிதா சம்பத் மற்றும் சாரிக் இருவரும் டைட்டில் வெற்றி பெற்றிருந்தனர்.

-விளம்பரம்-

தற்போது பிக்பாஸ் ஜோடிகள் இரண்டாவது சீசன் நடந்து வருகிறது. இதில் ரம்யா கிருஷ்ணனும், நடன இயக்குனர் சதீஷ் நடுவர்களாக பங்கேற்று இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ரியல், ரீல் ஜோடிகள் போட்டியாளராக பங்குபெற்று வருகின்றனர். இதில் ஒரு ரீல் ஜோடி தான் பாவனி மற்றும் அமீர். இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் சேர்ந்து நடனம் ஆடி வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை இவர்களுடைய நடனத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் படை சேர்ந்துள்ளது.

- Advertisement -

அமீர்-பாவனி :

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்களுடைய காதல் காட்சிகள் பலரையும் கவர்ந்து இருந்தது. தற்போது பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கிறார்கள். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளர் தான் தாமரைச்செல்வி. இவரும் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார். மிக எளிமையான பின்னணியில் இருந்து வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து தற்போது தனக்கென ஒரு செல்வாக்கை உருவாக்கி இருக்கிறார் தாமரை.

தாமரை குறித்த தகவல்:

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல கடுமையான சவால்களை கடந்து தன்னுடைய திறமையை காட்டி மக்கள் மத்தியில் அதிகமாக கவனம் பெற்று இருந்தார். அது மட்டுமில்லாமல் இவர் தான் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால், குறைவான வாக்குகள் பெற்று தாமரை வெளியேறி இருந்தார். அதற்கு பின் இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்குபெற்று டாப் 4 இடத்தில் இருந்தார். தற்போது தாமரை இவருடைய கணவருடன் சேர்ந்து பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார்.

-விளம்பரம்-

பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் வைத்த கேம்:

இந்த நிகழ்ச்சியில் தாமரைக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்தது இல்லையோ, அவருடைய கணவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் சேர்ந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது நிகழ்ச்சியில் ஒரு கேம் வைக்கப்பட்டு இருந்தது. அதில் பைனல்சுக்கு செல்ல தகுதியானவர்கள் இல்லை என்பவர்கள் புகைப்படம் மீது கரியை பூச வேண்டும்.அதற்கு தாமரை, அமீர்-பாவனி பைனல் செல்ல தகுதி இல்லை என்று கூறுகிறார்.

தாமரை செயலால் கடுப்பான அமீர்:

ஏன்னா, அமிர் ஏற்கனவே நடன இயக்குனராக இருக்கிறவர். அதனால் அவர் இறுதிச்சுற்று செல்வதற்கு தகுதி இல்லை என்று சொல்கிறார். அதற்கு ரம்யா கிருஷ்ணன், தாமரை நீங்கள் ரொம்ப ஸ்மார்ட் என்று கூறுகிறார். ஆனால், தாமரை செய்த செயலுக்கு அமீர் மற்றும் பாவனியின் முகமே மாறிவிட்டது. அவர்கள் இருவரும் கடுப்பாகி இருப்பது போலவே இருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement