ஓட்டிங்கில் கடைசி இரண்டு இடத்தில் விக்ரம் மற்றும் ஜோவிகா – கடைசியில் வெளியேறியது யார் தெரியுமா?

0
437
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 59 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், கடந்த வாரம் கொடுத்த மூன்று பூகம்ப டாஸ்கில் இரண்டு டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்றதால் இரண்டு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உறுதியானது. அந்த வகையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஜய் வர்மா மற்றும் அனன்யா wild Card போட்டியாளர்களாக உள்ளே நுழைந்து இருக்கின்றனர். இவர்கள் இருவரின் வருகையில் டபுள் ஏவிக்ஷன் ஏற்பட்டது. இதில் பிராவோ மற்றும் அக்ஷ்யா வெளியேறினார்கள். கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்கில் விஷ்ணு, நிக்சன்,ஜோவிகா ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இதில் நிக்ஸன் வெற்றி பெற்று இந்த வார தலைவரானார். நிக்சனின் கேப்டன்சியில் யாருக்காவது அநீதி நிகழ்ந்து இருக்கும் பட்சத்தில் வீட்டில் வைத்து இருக்கும் மணியை அடிக்கலாம். ஒருவேளை பெரும்பாலனோர் மணி அடிக்கும் பட்சத்தில் நிக்சனின் கேப்டன் பதிவு பறிக்கப்படுவதுடன் அவர் நேரடியாக இந்த வார நாமினேஷனில் இடம்பெறுவார் என்றும் அறிவித்து இருந்தார் பிக் பாஸ். பின் வழக்கம் போல் பிக் பாஸ் வீட்டில் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நாமினேட் பட்டியல்:

பின் பிக் பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேட் நடைபெற்றிருக்கிறது. அதில் தினேஷ், சரவணன் விக்ரம், ஜோவிகா, மணி, கூல் சுரேஷ், விசித்ரா, பூர்ணிமா, அனன்யா, ஆகியோர் நாமினேட் ஆகியிருக்கிறார்கள். அதன் பின் இன்று இந்த அரண்மனை டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ராஜாவாக நி க்சன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இனி பிக் பாஸ் வீடே கலவர பூமியாக இருக்க போகிறது. இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல் தான் வைரலாகி இருக்கிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் சரவணா விக்ரம்:

இந்த வாரம் சரவணன் விக்ரம் தான் வெளியேறுவார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே விக்ரம் எதையும் சுவாரசியமாக செய்யவில்லை. மற்ற போட்டியாளர்கள் சண்டையில் கூட தலையிடவில்லை. இதனால் இவரை ரசிகர்கள் பலரும் விமர்சித்து இருந்தார்கள். அதோடு பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் தான் என்று சரவணன் சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால், இவர் எந்த ஒரு கன்டென்ட் கொடுக்காமல் இருக்கிறார்.

வெளியேறிய நபர்:

இதனால் ரசிகர்கள் பலரும் அவர் மிக்சர் சாப்பிட தான் லாக்கி என்றெல்லாம் கிண்டல் அடித்திருக்கிறார்கள். அதேபோல் இந்த வாரம் நாமினேட்டிலும் சரவணா விக்ரம் பெயர் இடம் பிடித்து இருக்கிறது. இதனால் விக்ரம் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சரவணன் தப்பித்திருக்கிறார். வனிதா மகள் ஜோவிகா தான் குறைவான வாக்குகளை பெற்று இந்த வாரம் வெளியேறி இருக்கிறார்.

Advertisement