நயன்தாராவை தொடர்ந்து ஜூலியை சாமியாக வழிபடும் வெறித்தனமான ரசிகர். இதோ அந்த புகைப்படம்.

0
1460
julie
- Advertisement -

தமிழ் சினிமாவில் அம்மன் படங்கள் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் சமீப காலமாகவே அம்மன் படங்களில் நடிக்க நடிகைகள் தயக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்தில்நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு முன்பாகவே அம்மன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நம்ம பிக் பாஸ் ஜூலி தான். நயன்தாரா நடிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி இருந்தது

-விளம்பரம்-

சமீபத்தில் கூட நயன்தாராவின் அம்மன் கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் நயன்தாரா தீவிர ரசிகர் ஒருவர் தன் வீட்டு பூஜை அறையில் சாமியோடு சாமியாக நயன்தாராவின் அம்மன் புகைப்படத்திற்கு மாலை போட்டு கூப்பிட்டு வரும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாக அதனை மீம்ஸ் போடு வைரலாகினர்.

- Advertisement -

தற்போது நயன்தாராவை தொடர்ந்து பிக் பாஸ் ஜூலியின் புகைப்படத்தை ஜூலி வெறியர் ஒருவர், பூஜை அறையில் சாமியோடு சாமியாக வைத்து பழிப்பபட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், ஜூலியின் புகைப்படத்தை தனது செல் போன் கேஸிலும் பதிவிட்டு இருகிறார் அந்த ஜூலி வெறியர்.

நடிகை ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மன் தாயி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர்கள் கூட எப்போதோ வெளியானது. மேலும், அந்த டீஸர் ரசிகர்களின் கேலி கிண்டல்களுக்கு உள்ளானது. ஆனால், இந்த படம் இன்னும் வெளியான நிலையில் இல்லை. இருப்பினும் ஜூலி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement