வயதான நபருடன் படு மோசமாக ஆடிய ஜூலி – வைரலாகும் வீடியோ. ஜல்லிக்கட்டுல பார்த்த ஜூலிய ஒரு நிமிஷம் யோசிச்சி பாருங்க.

0
774
- Advertisement -

பிக் பாஸ் ஜூலி சீரியலில் என்ட்ரி கொடுத்து இருக்கும் ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இவர் சினிமா பற்றி எந்த ஒரு தெளிவும், அனுபவமும் இல்லாமல் முதல் சீசனில் கலந்து கொண்டவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜூலி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தாலும், பல விமர்சனங்களை சந்தித்து இருந்தார்.

-விளம்பரம்-
julie

ஆனால், இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர். 2017 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரின் பல வீடியோக்கள் வைரலானது. அப்போது இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக் கொண்டார் ஜூலி. அதற்கு காரணம், இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த கலவரத்தால் மாத்தி மாத்தி பொய் பேசி இருந்தது தான்.

- Advertisement -

பிக் பாஸ் ஜூலி:

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக இருக்கிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார். இருந்தாலும், ஜூலி குறித்து பலரும் பயங்கரமாக திட்டி தீர்த்து மீம்ஸ் போட்டு கலாய்த்து இருந்தார்கள்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

ஆனால், ஜூலி மனம் தளராமல் தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தார். பின் கடந்த 2022 ஆம் ஆண்டு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருடைய இமேஜை அப்படியே சுக்குநூறாக உடைத்து தன்னுடைய நேர்மையான முகத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்து இறுதி வாரம் வரை வந்து இருந்தார். இதனால் பலரும் இந்த நிகழ்ச்சியில் ஜூலி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்திருந்தனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜூலி:

ஆனால், ஜூலி போட்டியில் வெற்றி அடையவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் வெற்றி அடைந்து விட்டார் என்றே சொல்லலாம். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி ஒரு சில நிகழ்ச்சியில் மட்டுமே கலந்துகொண்டார். அதே போல ஜீ தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருந்தார். அது போக, ஜூலி சொந்தமாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

முகம் சுளிக்கும் டான்ஸ் :

அதில் அவர், தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ, ரீல்ஸ் வீடியோ என்று எதையாவது பதிவிட்டு வந்தார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். என்னதான் இவர் நல்ல பெயர் எடுத்தாலும் அதனை கெடுத்துக்கொள்ளும் விதமாக ஏதாவது சர்ச்சையில் சிக்கிவிடுகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வயதான நபர் ஒருவருடன் முகம் சுழிக்கும் அளவிற்கு ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Advertisement