உடல் முழுதும் கறியை பூசிக்கொண்டு ஜூலி நடத்திய போட்டோ ஷூட் – இதுக்கு தானாம் அது.

0
28769
julie
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் குரல் கொடுத்து உயிரை தமிழச்சி என்று பெயரெடுத்தவர் ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆகா ஓகோ என்று பெயரெடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது பெயரை கண்டமேனிக்கு டேமேஜ் செய்து கொண்டார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட அவப்பெயர் ஏற்பட்டது இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தபின்னர் தொகுப்பாளினியாக களமிறங்கிய ஜூலி தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Image

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விமல் நடிப்பில் வெளியான மன்னர் வகையறா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த கூலி அதன் பின்னர் அம்மன் தாயி உத்தமி போன்ற படங்களில் நடித்து இருந்தார். ஆனால் இந்த படங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் அடிக்கடி வித்தியாசமான போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார் ஜூலி. அந்த வகையில் சமீபத்தில் உடல் முழுவதும் கரியைப் பூசிக் கொண்டது போல கருப்பு சாயத்தைப் பூசிக்கொண்டு ஜூலி சில புகைப்படங்களை பகிர்ந்து #BlackLivesMatters என்ற ஹேஸ் டேக் கூட குறிப்பிட்டிருக்கிறார்

- Advertisement -

கடந்த மே மாதம் அமெரிக்காவில் கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையில் கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபரை வெள்ளை போலீஸர் கழுத்து நெருக்கி கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . இந்த சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்காக ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி கோலிவுட் பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துவந்தனர் . மேலும், சமூக வலைதளத்தில் கூட பல கண்டனங்கள் எழுந்தது

ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் #BlackLivesMatters என்ற ஹேஸ் டேக் கூட ட்ரெண்டிங்கில் வந்தது. இந்த சம்பவம் நடந்து 4 மாதம் ஆன நிலையில் தற்போது ஜூலி இந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி இருக்கிறார். இருப்பினும் ஜூலியின் இந்த வித்யாசமான போட்டோ ஷூட்களை பலர் பாராட்டியும் வருகின்றனர். இன்னும் பல வித்யாசமான போட்டோ ஷூட்களை கூட ஜுலி நடத்தி இருக்கிறாராம்.

-விளம்பரம்-
Advertisement