மீண்டும் வீர தமிச்சி..! லண்டன் ரசிகர்கள் பரிசு..! புகைப்படத்தை சரமாரியாக திட்டி தீர்த்த நெட்டிசன்.! பாருங்க புரியும்

0
1603
julie
- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்ட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் “வீர தமிழச்சி” என்ற நல்ல பெயரை எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா ஆர்மி, ரைசா ஆர்மி, மும்தாஜ் ஆர்மி என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் ஆர்மி இருப்பது போல ஜூலிக்கு ஆர்மி இருக்கத்தான் செய்கிறது.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ஜூலி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். .அந்த புகைப்படத்தில் ஜூலி அணிந்திருக்கும் டீ ஷர்ட்டில் வீர தமிழச்சி ஜூலி பேன்ஸ் UK என்று அச்சிடப்பட்டிருக்கிறது. இதனை கண்ட வலைதளவாசிகள் அனைவரும் என்னது ஜூலிக்கு லண்டனில் ரசிகர் மன்றமா என்று பலரும் ஆச்சர்யத்தில் வாயை பிளந்துள்ளனர்.

அத்தோடு உண்மையில் லண்டனில் ஜூலிக்கு ரசிகர் மன்றம் இருக்கிறதா ? இல்லை ஜூலியே இது போன்ற டீ ஷிர்ட்டை அச்சிட்டு அணிந்துள்ளாரா என்று பலரும் ஜூலியை கிண்டல் செய்து வருகின்றனர். இருப்பினும் ஜூலி வெறியர்கள் சிலர் ஜூலியின் ரசிகர்கள் பட்டாளத்தை கண்டு பாராட்டியும் வருகின்றனர். சிரிக்காதீங்க , நம்புங்க ஜூலிக்கு லண்டனில் ரசிகர் மன்றம் இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement