வனிதாவை தொடர்ந்து சீரியலில் என்ட்ரி ஆன பிக் பாஸ் ஜூலி – எந்த சேனல், என்ன தொடர் தெரியுமா? வைரலாகும் ப்ரோமோ

0
737
julie
- Advertisement -

பிக் பாஸ் ஜூலி சீரியலில் என்ட்ரி கொடுத்து இருக்கும் ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இவர் சினிமா பற்றி எந்த ஒரு தெளிவும், அனுபவமும் இல்லாமல் முதல் சீசனில் கலந்து கொண்டவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜூலி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தாலும், பல விமர்சனங்களை சந்தித்து இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர். ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக் கொண்டார் ஜூலி. அதற்கு காரணம், இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த கலவரத்தால் மாத்தி மாத்தி பொய் பேசி இருந்தது தான். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் ஜூலி:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார். இருந்தாலும், ஜூலி குறித்து பலரும் பயங்கரமாக திட்டி தீர்த்து மீம்ஸ் போட்டு கலாய்த்து இருந்தார்கள். ஆனால், ஜூலி மனம் தளராமல் தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தார். பின் சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி கலந்துகொண்டிருந்தார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருடைய இமேஜை அப்படியே சுக்குநூறாக உடைத்து தன்னுடைய நேர்மையான முகத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்து இறுதி வாரம் வரை வந்து இருந்தார். இதனால் பலரும் இந்த நிகழ்ச்சியில் ஜூலி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜூலி போட்டியில் வெற்றி அடையவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் வெற்றி அடைந்து விட்டார் என்றே சொல்லலாம். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி ஒரு சில நிகழ்ச்சியில் மட்டுமே கலந்துகொண்டார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜூலி:

அதே போல ஜீ தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருந்தார். அது போக, ஜூலி சொந்தமாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர், தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ, ரீல்ஸ் வீடியோ என்று எதையாவது பதிவிட்டு வந்தார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் சின்னத்திரை சீரியலில் ஜூலி கமிட் ஆகி இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜூலி நடிக்கும் புது சீரியல்:

அதாவது, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் தான் ஜூலி கமிட் ஆகி இருக்கிறார். ஜீ தமிழில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கன்னத்தில் முத்தமிட்டால். இந்த சீரியலில் கொற்றவை என்ற கதாபாத்திரத்தில் தான் ஜூலி நடிக்கிறார். அதற்கான ப்ரோமோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இவர் கெஸ்ட் ரோலாக நடிக்கிறாரா? இல்லை இந்த சீரியலில் நீடித்திருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement