தானே வடிவமைத்த ஆடையை அணிந்து ஷார்சாட்டில் போஸ் கொடுத்த ஜூலி.! இங்கையும் வந்துடீங்களா.

0
433

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், போராட்டத்திற்குப் அனைவரும் ஜூலியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்தனர்.

ஆனால், இது எதற்கும் ரியாக்ஷன் காட்டாத ஜூலி ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகக் களமிறங்கினார். பின்னர், ‘மன்னர் வகையறா’ படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றினார். வகையறா’ தொடர்ந்து தமிழ் சினிமாவில் அம்மன் தாயி படத்தில் நடித்து வருகிறார்.

சமீப காலமாக இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என்று தனது அன்றாட நடவடிக்கைகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வந்த ஜூலி தற்போது ஷார்சாட் என்ற புதிய சமூக வலைத்தளத்திலும் தனது அட்ராசிட்டியை ஆரம்பித்துவிட்டார்.

சமீபத்தில் ஜூலி தனது ஷார்சாட் பக்கத்தில் தானே வடிவமைத்த ஆடை ஒன்றை அணிந்து கொண்டு அதனை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இதுநாள் வரை மற்ற சமூக வலைதளத்தில் சுய விளம்பரம் செய்து கொண்ட ஜூலி தற்போது இங்கயும் வந்துட்டாங்களா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.